“செஞ்சி சிறுமி சீக்கிரம் கிடைக்கணும்..” 40 நாட்கள் ஆகியும் துப்பு கிடைக்காததால் யாகம் நடத்திய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சத்தி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 40 நாட்களாகியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் போலீசார் யாகம் நடத்தி பூஜை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. இவரது 7 வயது மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11ம் தேதி இரவு சிறுமி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். பின்னர் பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Gingee girl missing case

செஞ்சி சிறுமி

முதலில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து அக்டோபர் 21ம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் என்ன நடந்தது என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. தொலைவில் உள்ள கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், சிறுமியின் வீட்டுக்கு எதிரே உள்ள செங்கல் சூளையிலும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். அங்கிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பல் மாதிரிகள் சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

40 நாட்கள் ஆகிவிட்டது

நவம்பர் 20-ம் தேதியான இன்றுடன் சிறுமி மாயமாகி 40 நாட்களாகும் நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், சிறுமி குறித்த உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

யாகம்

இந்த சூழலில் தான் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற இந்த யாகத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சிறுமி விரைவில் கிடைக்க வேண்டும் என்றும், குற்ற சம்பவங்கள் குறைய வேண்டும் என்றும் வேண்டி இந்த பூஜை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமர்சனம்

மேலும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான பல இறப்பு வழக்குகள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. அதுபோன்ற குற்ற சம்பவங்கள் குறைய வேண்டும் என்பதற்காகவே யாகம் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 40 நாட்களாகியும் மாயமான சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், போலீசாரே யாகம் நடத்தியிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குற்ற வழக்குகளை புலனாய்வு செய்து ஆதாரங்களின் அடிப்படையில் கண்டுபிடிக்க வேண்டிய போலீசார் யாகம் நடத்துவது சரிதானா என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+