போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது? மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை.. நிஷாந்த் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: காவல்துறை காவலில் எடுக்கப்பட்டிருந்த நிஷாந்த் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிஷாந்த் தரப்பு வழக்கறிஞர், போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை பகிர்ந்துள்ளார்.

மதுரை பைபாஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில், கடந்த நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு சுமார் ₹15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கட்டிடத்தின் லிஃப்ட் பகுதி வழியாக உள்ளே புகுந்து, சிசிடிவி கேமராக்களை மறைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

Tanishq Jewellery theft

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான நிஷாந்தை கைது செய்தனர். மேலும், இவருக்கு உதவியதாக நிஷாந்தின் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியும் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட 11.384 கிலோ நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நேற்று அனுமதி கோரினர். அதன்படி அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்பு இல்லை

கடன் தொல்லை மற்றும் ஆடம்பர வழக்கைக்கு ஆசைப்பட்டே அவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டதாகவும், இதற்காக மூன்று டூவீலர்களை பயன்படுத்தியதாகவும் நிஷாந்த் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டபோது "மீனாட்சிக்கும் இந்த கொள்ளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என நிஷாந்த் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது

இதற்கிடையே இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய நிஷாசந்த் தரப்பு வழக்கறிஞர், "நேற்று மாலை 4:40 மணிக்கு நிஷாந்தை போலீஸ் காவலில் காவலர்கள் எடுத்திருந்தனர். நீதிமன்றம் உத்தரவிட்டபடி இன்று சரியாக மாலை 4:40 மணிக்கு அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஏற்கெனவே டிசம்பர் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் விசாரணையின் போது ஏதேனும் துன்புறுத்தல் நடந்ததா என நிஷாந்திடம் நீதிபதி கேட்டார். அதற்குத் தன்னை எவ்வித துன்புறுத்தலும் செய்யவில்லை என்றும், உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் நிஷாந்த் நீதிமன்றத்தில் கூறினார்.

போலீஸ் நிலையம் சென்றோம்

நீதிமன்ற உத்தரவின்படி நிஷாந்தை சந்திப்பதற்காக நேற்று இரவு 11 மணிக்கு காவல் நிலையத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு யாரும் இல்லாத நிலையில், (திருட்டின் போது பயன்படுத்தப்பட்ட) வாகனத்தை மீட்பதற்காக அவரை சேலத்திற்கு அழைத்து சென்றிருப்பதாக காவல் ஆய்வாளர் தொலைபேசியில் தெரிவித்தார். பின்னர் இன்று காலை 10 மணிக்கு அவரை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

காலை 10 மணிக்கு வந்த பிறகு நிஷாந்திற்கு சிறிது நேரம் ஓய்வளிக்கப்பட்டு, பிற்பகல் 2:15 மணியளவில் சம்பவம் நடந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. என்ன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது இதுவரை தெரியவில்லை. என்னென்ன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, எங்கெல்லாம் அழைத்து செல்லப்பட்டார் என்ற முழு விவரங்களும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போதே தெரியவரும்.

போலீஸ் விசாரணைக்கு நாங்கள் இடையூறு விளைவிக்கவில்லை. நிஷாந்திற்கு எவ்வித துன்புறுத்தலும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் மட்டுமே நாங்கள் அவரை நேரில் சந்திக்க சென்றோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+