பேசறவங்க பேசிட்டு இருங்க.. முதல் நாள் வசூலில் கோடியை அள்ளிய "ஓம்”.. அதுவும் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவான ஓம் (Operation Mole) படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படம் நேற்று நவம்பர் 20 வெளியான பிறகு பல விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் விமர்சனம் எல்லாம் ஓரம் போங்க என்று சொல்ற மாதிரி தான் முதல் நாள் வசூல் நிலவரம் மாஸ் காட்டி இருக்கிறது. சமீப காலமாகவே தனுஷ்க்கு பெரிய அளவில் முதல் நாள் வசூல் வராமல் இருந்த நிலையில் இந்த படம் அவருக்கு கம்பேக் என்று சொல்ற மாதிரி நம்பிக்கை கொடுத்திருக்கிறது.

சமீப காலமாக பெரிய படங்கள் எல்லாம் வசூலில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் பிரமோஷன் செய்து ஆகா ஓகோ என்று படத்தை பற்றி பேசிவிட்டால் அவ்வளவுதான். கடைசியில் படம் வெளியான பிறகு ட்ரோல் மெட்டீரியலாக வந்து விடுகிறது. அது போல தான் நேற்று ஓம் படத்தின் அதிகாலை ஷோ பார்த்த பிறகு பலரும் பலவிதமாக பேச தொடங்கி விட்டனர். ஒரு சிலர், "படம் வேற லெவல் என்று பாராட்ட", இன்னும் ஒரு சிலர், "ஐயையோ, ஓம் படத்தை பார்த்தால் தலைவலி வருதுயா.. படத்தை பார்க்க முடியாது. இப்படி ஒரு படத்துல தனுஷ் நடிச்சிருக்கவே கூடாது, அதில் அவருக்கு ரோலே இல்ல, சாய் பல்லவி தான் இந்த படத்தோட ஹீரோ" என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது.

Dhanush OM Movie

கலவையான விமர்சனங்கள்

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியை வைத்து ட்ரோலும் வந்துவிட்டது. ஆனாலும் அதை எல்லாம் கடந்து மாலை மற்றும் இரவு ஷோக்கு தனுஷ் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்த நிலையில் முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் வந்திருக்கிறது. ஏற்கனவே இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மீது ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கையை இருக்கிறது. அமரன் படத்தை பார்த்த பிறகு இந்த மனுஷனுக்குள் ஏதோ இருக்கு என்று அவருடைய படத்தை பற்றிய பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.

ஓம் முதல் நாள் வசூல் நிலவரம்

அதனாலேயே ஓம் படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் அட்வான்ஸ் புக்கிங்கில் 15 கோடிக்கு மேல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் முதல் நாள் எவ்வளவு வசூல் கிடைத்தது என்பது பற்றி பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் சாக்நிக் வெளியிட்ட தகவலில், முதல் நாளில் உலகம் முழுவதும் ஓம் திரைப்படம் 31.55 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக கூறி இருக்கிறது. தமிழில் மட்டும் 13. 35 கோடி, தெலுங்கில் வெளியான ஓம் திரைப்படம் 4 கோடி ரூபாயும், ஹிந்தியில் 35 லட்சம் வசூலை பெற்றதாகவும், வெளிநாட்டில் மட்டும் 11 கோடி வசூலை ஈட்டிய நிலையில் 31.55 கோடி வசூல் முதல் நாள் பெற்றதாக கூறப்படுகிறது.

100 கோடி வசூல்

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்கள் என்பதால் முதல் நாள் வேகத்திலேயே ஓடினால் முதல் 3 நாட்களில் மட்டும் 100 கோடி வசூலை தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் நடித்த படங்கள் தமிழ்நாட்டில் சரியாக போகாத நிலையில் 100 கோடி வசூலை முதல் 3 நாட்களில் கருத்தால் தனுஷுக்கு இது கம்பேக் படமாக இருக்கும்.

வசூல் அதிகரிக்குமா?

அதுபோல நேற்று சென்னை உட்பட சில இடங்களில் தியேட்டர் ஓனர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே இருந்த பிரச்சனையில் படத்தை திரையிடாமல் வைத்திருந்தனர். ஆனால் இப்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதால் இன்று மேலும் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே தனுஷ் அரசியலுக்கு வரப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தனுஷின் படங்கள் சரியாக போகவில்லையே என்ற வருத்தமும் அவருடைய ரசிகர்களுக்கு இருந்தது. அந்த வருத்தத்தை துடைக்கிற மாதிரி இப்போ இந்த தகவல் ஆறுதலாக அமைந்திருக்கிறது. சரி, இனி வசூலை அள்ளுகிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+