புதுச்சேரி, காரைக்காலில் விவசாயிகளுக்கான நிலப்பட்டா மாற்றும் சிறப்பு முகாம்.. தேவையான ஆவணங்கள்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள உழவர் உதவியகங்களில் வருகிற 25-ந் தேதி விவசாயிகளுக்கான நிலப்பட்டா மாற்றும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் கிரையப்பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், விடுதலை பத்திரம், தானப்பத்திரம், உயில் சாசனம், பரிவர்த்தனை பத்திரம், அதற்கான மூலப்பத்திரங்கள், சொத்துக்களின் மீது உரிமையை உறுதி செய்யும் ஆவணங்கள், பழைய பட்டா, ஆதார் அடையாள அட்டை, நிலவரி செலுத்திய ரசீது, நில வரைபடம் போன்ற ஆவணங்களின் நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்து புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் அமைச்சகம் சார்பில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம், வேளாண் தொழில்நுட்ப முகமை, விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் பயிறு வகைகளின் தன்னிறைவு திட்டம், வேளாண் எந்திரமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

land patta transfer

இனிமேல் வேளாண் அமைச்சகத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெற விரும்பும் பயனாளிகள் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் தம்மை பதிவு செய்து கொண்டு தனித்துவமான அடையாள எண்ணை பெற வேண்டும். கடந்த 3 வாரங்களாக வேளாண்துறையின் பல்வேறு உழவர் உதவியகங்களில் நடைபெற்ற முகாம்களில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் ஆதார் எண், ஆதார் இணைய தளத்தில் சரிபார்க்கப்பட்டு அதன் பின்னர் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பட்டா இல்லாத சுமார் 7 ஆயிரம் விவசாயிகளின் ஆதார் எண் மூலம், ஆதார் இணையதளத்தில் தனிப்பட்ட விவரங்கள் மட்டும் அறியப்பட்டு மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பல்வேறு திட்டங்களில் பயனடைய நிலப்பட்டா இல்லாத காரணத்தால் அவர்களுக்கு நிலப்பட்டா வழங்கி மத்திய விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்து தொடர்ந்து பயனடைய ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதற்காக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள உழவர் உதவியகங்களில் வருகிற 25-ந் தேதி விவசாயிகளுக்கான நிலப்பட்டா மாற்றும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் கிரையப்பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், விடுதலை பத்திரம், தானப்பத்திரம், உயில் சாசனம், பரிவர்த்தனை பத்திரம், அதற்கான மூலப்பத்திரங்கள், சொத்துக்களின் மீது உரிமையை உறுதி செய்யும் ஆவணங்கள், பழைய பட்டா, ஆதார் அடையாள அட்டை, நிலவரி செலுத்திய ரசீது, நில வரைபடம் போன்ற ஆவணங்களின் நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+