நிலப்பட்டா: மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு விரைவில் பட்டா? பயன்படாத நிலத்தில் தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் ஆங்காங்கே, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலேயே உள்ளதாகவும் விவசாயிகள் பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில், அரசுக்கு பயன்படாத, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.. இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
புறம்போக்கு நிலம் என்று எடுத்துக் கொண்டால் எத்தனையோ வகைகள் உள்ளன.. குறிப்பாக, மேய்ச்சல் நிலம், தரிசு நிலம், கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளும், சாலை, சுடுகாடு, நத்தம் புறம்போக்கு போன்ற இடங்களுமாகும்.

இதில், கிராமங்களில் ஆடு மாடுகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையே மேய்க்கால் நிலம் என்பார்கள்.. இந்த நிலமானது, மழைக்காலங்களில் பச்சை பசேலென்றும், வெயில் காலங்களில் வறண்டும் காய்ந்தும் இருக்கும்.
மேய்க்கால் புறம்போக்கு நிலம்
இந்த நிலப்பகுதியில்தான், கால்நடைகளின் கழிவினை சேர்த்து வைப்பார்கள்.. இந்த கழிவினை, விவசாயிகள் தங்களது வயல்களில் உரமாக பயன்படுத்தி கொள்வார்கள்.
விவசாயிகள் தங்களது ஆடு மாடு மேய்ப்பதற்காக அரசாங்கமே ஒதுக்கியிருக்கும் இடம் என்பதல், பொதுமக்கள் இந்த நிலத்தை உரிமை கொண்டாடவும் முடியாது, இந்த நிலங்களை விலைக்கு வாங்கவும் முடியாது, இதற்கு பட்டா கேட்கவும் முடியாது.
ஆனாலும், மேய்க்கால் நிலத்தை கால்நடைகளை மேய்ப்பதற்கு பயன்படுத்தாமல், சிலர் சொந்தமாக வீடுகளையும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களையும் கட்டிக்கொண்டு முறைகேடாக பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.. ஒருகட்டத்தில் இவை தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்துக்கு சென்றன.. இறுதியில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில், ஒருத்தருமே ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று ஹைகோர்ட் கண்டிப்புடனான உத்தரவை சமீபத்தில் பிறப்பித்திருந்தது நினைவிருக்கலாம்.
ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம்
இதுபோன்ற நிலத்தை ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம் என்பதால், இலவச பட்டா வழங்கும் திட்டத்தில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் தவிர்க்கப்பட்டன.
எனவே, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்கும் திட்டம், 20 வருடங்களுக்கும் மேலாகவே அமலில் இருந்து வருகிறது.. எனவே, இந்த இடத்தில் பட்டா வேண்டி, பொதுமக்களும் ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள்.
இந்த விண்ணப்பங்களை வருவாய்த்துறை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நிலம், எதிர்கால பயன்பாட்டுக்கு அரசுக்கு தேவைப்படாது என்று உறுதியாக தெரிந்தால், அந்த குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களுக்கு இலவச பட்டாவை வழங்குகிறது.
ஆட்சேபனையற்ற நிலம்
இப்படிப்பட்ட சூழலில், பயன்பாடு இல்லாத மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆய்வு செய்து, வகைப்பாடு மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தன..
காரணம், நகரமயமாதல் அதிகரித்துள்ள பகுதிகளில், அதிலும் கால்நடைகள் வளர்ப்பு இல்லாத இடங்களில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை தொடர்ந்து பராமரிக்க முடியாத சூழல் உள்ளது.. அரசின் திட்டங்களுக்கு கூட, இதுபோன்ற நிலங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தமிழக அரசு வழங்கும் பட்டா
எனவே, சாகுபடி நடக்காத விவசாய நிலங்கள், பிற தேவைகளுக்காக வகைப்பாடு மாற்றம் செய்யப்படுவதைபோல, பயன்பாடு இல்லாத மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆய்வு செய்து, வகைப்பாடு மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது..
இதையடுத்து, பயன்பாடற்ற மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு, பட்டா வழங்குவதற்கான வழிமுறைகளை, ஆராயவும், சென்னை போன்று நகரமயமாதல் அதிகமுள்ள பகுதிகளில், பயன்பாடு இல்லாத மேய்க்கால் நிலங்களை வகைப்பாடு மாற்றி, பட்டா கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயவும் தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறதாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications