ஈரோட்டில் பிரபல கல்வி குழும தலைவர் ஒரு நொடிக்கூட யோசிக்கவில்லை.. ரயில் நிலையத்தில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: திருப்பூர் மாவட்டம் முத்தூர் மற்றும் வெள்ளக்கோவில் பகுதிகளில் வித்யாசாகர் கல்வி நிறுவனங்களின் செயலாளராக இருந்தவர் சக்திவேல். இவர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வந்தார். நேற்று காலை சக்திவேல் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது இரண்டாவது பிளாட்பாரத்தில் சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது சக்திவேல் எடுத்த தவறான முடிவு மொத்த ரயில் நிலையத்தையும் ஆடிப்போக வைத்துள்ளது.

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 56). இவர் திருப்பூர் மாவட்டம் முத்தூர் மற்றும் வெள்ளக்கோவில் பகுதிகளில் வித்யாசாகர் கல்வி நிறுவனங்களின் செயலாளராக இருந்து வந்தார். மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவருடைய மனைவி பெயர் ரமணி (47). இவரும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.

What did Sakthivel the head of a prominent educational group do at the Erode railway station

இந்நிலையில் நேற்று காலை சக்திவேல் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தார். 2-வது பிளாட்பாரத்திற்கு வந்த அவர் அங்கு ஒரு இருக்கையில் அமைதியாக உட்கார்ந்தார். கையில் ஒரு பை கொண்டு வந்திருந்தார். காலை 10 மணி அளவில் கோவை நோக்கிச் சென்ற வெற்றுப் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று 2-வது பிளாட்பாரத்தில் வேகமாகச் சென்றது. அப்போது சக்திவேல், இருக்கையை விட்டு எழுந்து யாரும் எதிர்பாராதவகையில் சரக்கு ரயில் முன்பு பாய்ந்தார். இதைப் பார்த்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இந்த சூழலில் அடுத்த சில நொடியில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பலியானார்.

இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சக்திவேலின் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது உடமைகளான கைப்பையை போலீஸார் சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் ரூ.500 பணமட்டும் இருந்தது.

தனியார் பள்ளிச் செயலாளர் சக்திவேல் தற்கொலை தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில நாட்களாகவே சக்திவேல் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவர் எதற்காக ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தார், ஏன் சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்? அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமா? வேறு காரணங்கள் உள்ளதா? என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன சக்திவேலுக்கு நிஷாந்த் (16) என்ற மகனும், சஞ்சனா ஆதித்யா (5) என்ற மகளும் உள்ளனர். பள்ளிக்கூட செயலாளரின் மரணம் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+