"திருமாவளவன் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்” - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டல்!
சென்னை: "திருமாவளவன் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்" என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிண்டல் செய்துள்ளார். தவெக அமைச்சரவையில் இருந்தாலும் திமுகவுடன் நட்பு தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துக்கு வைகோ பதில் கொடுத்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், இன்னும் திமுக கூட்டணியில் இருக்கிறீர்களா? என என்னிடம் கேட்டால், ஆம்.. திமுக கூட்டணியில் இருப்பதாகவே உணர்கிறோம். இதுவே என் பதில். தற்போதுவரை தவெக கூட்டணியில் விசிக இணைய அதிகாரப்பூர்வமாக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.

விசிக அமைச்சரவையில் இடம் பெற்றதும் திமுகவுக்கு துரோகம் செய்து விட்டோம் என விமர்சிக்கின்றனர். பதவி என்றவுடன் ஒரு கூட்டணியை உதறிவிட்டு நாங்கள் ஓடிவிடவில்லை, எடுக்கின்ற முடிவுகள் ஒவ்வொன்றையும் கூட்டணி தலைமையான மு.க.ஸ்டாலினிடம் பகிர்ந்து கொண்டோம். அந்த உறவு இன்னும் தொடர்கிறது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் கோவில்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, முந்தைய ஆட்சியாளர்களால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதை சமாளிக்க முடியாமல் முதலமைச்சர் திணறிக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.
மேலும், தவெக அமைச்சரவையில் தொடர்ந்தலும், திமுகவுடன் நட்பு தொடரும் என திருமாவளவன் கூறியது நோபல் பரிசு கொடுக்கவேண்டிய கருத்து என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிண்டல் அடித்துள்ளார்.













Click it and Unblock the Notifications