வெளிநாட்டு வங்கியில் ரூ.20 லட்சம் வரை பணம் இருக்கிறதா? வருமான வரித்துறை சொன்ன முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெளிநாட்டு வங்கி கணக்குகளில் ரூ.20 லட்சம் வரை பணம் வைத்திருப்பவர்கள் கணக்கு காட்ட தேவையில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.வெளிநாட்டுச் சொத்துகள் மற்றும் வருமானத்தை வெளிப்படுத்துவதற்கான ஒருமுறை வாய்ப்பை வழங்கும் திட்டமான 'பாஸ்ட்-டிஎஸ்' திட்டம் குறித்து வருமான வரித்துறை சில விளக்கங்களை அறிவித்துள்ளது.

வருமான வரித்துறையின் திட்டம் என்ன

வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள், வெளிநாட்டில் வசித்து வந்த இந்தியர்களுக்காக வருமான வரித்துறை புதிய திட்டத்தை அறிவித்து இருந்தது. இதன்படி, இதுவரை வெளியிடப்படாத வெளிநாட்டுச் சொத்துகள் மற்றும் வருமானத்தை வெளிப்படுத்துவதற்கான ஒருமுறை வாய்ப்பை வழங்கும் 'பாஸ்ட்-டிஎஸ்' திட்டம் வருமான வரித்துறையால் அறிமுகம் செய்தது. இந்த திட்டம் கடந்த ஆகஸ்டு 15 அன்று தொடங்கப்பட்டு, டிசம்பர் 31 அன்று முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது.

Bank Account

இந்த திட்டம் எதற்கு

தகுதியான வெளிநாட்டுச் சொத்துகள் அல்லது வருமானத்தை வெளிப்படுத்தத் தவறியிருக்கக்கூடிய மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் போன்ற வரி செலுத்துவோருக்காகவே இந்தத் திட்டத்தை வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது.

20 லட்சம் வரை கணக்கு காட்ட தேவையில்லை

இந்த திட்டத்தின் கீழ், வெளிநாட்டு வங்கி கணக்குகளில் ரூ.20 லட்சம் வரை பணம் வைத்திருப்பவர்கள் கணக்கு காட்ட தேவையில்லை என வருமான வரித்துறை தற்போது அறிவித்திருக்கிறது. எனினும் ஆனால், அந்த பணம் முறையான வருமானத்தில் இருந்து வந்ததாக இருக்க வேண்டும் என்றும், வருமான வரி கணக்கில் இதனை குறிப்பிட தவறியிருந்தாலும், ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் வருமானவரித்துறை கூறியுள்ளது.

வருமான வரித்துறை எச்சரிக்கை

அதேநேரம், கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் இருந்தால் கண்டிப்பாக வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் விவரங்களை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பால், வெளிநாட்டில் படித்தவர்கள், வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள், வெளிநாட்டில் வங்கிக் கணக்கில் சேமிப்பு வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள் நிச்சயம் பயனடைவார்கள். உதாரணமாக ஒருவர் மலேசியாவில் ஐந்து வருடங்கள் வேலை பார்த்து, அங்கு சம்பாதித்த பணத்தில் ₹18 லட்சத்தை வங்கிக் கணக்கில் வைத்திருப்பார் என வைப்போம். அந்தப் பணம் சட்டப்பூர்வமான சம்பளம் ஆக இருந்திருக்கும். சம்பாதித்த காலத்தில் அவர் வெளிநாட்டில் வரி வசிப்பிட அந்தஸ்தில் இருந்து இருப்பார். ஆனால் ந்தியாவுக்குத் திரும்பிய பிறகு வெளிநாட்டுக் கணக்கை ITR-ல் குறிப்பிடத் தவறியிருக்கிறார் என்றால், வருமானவரித்துறையின் இந்த அறிவிப்பு நிம்மதி அளிக்கும்.

யாருக்கு சிக்கல்

கணக்கில் காட்டப்படாத வருமானம் வைத்திருப்பவர்களுக்கு வருமான வரித்துறையின் அறிவிப்பு சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, அதே மலேசியாவின் வங்கியில் ₹18 லட்சம் இருக்கிறது. ஆனால் அந்தப் பணம் கணக்கில் காட்டப்படாத வணிக வருமானம் அல்லது வரி செலுத்தப்படாத வருமானம் என்பது தெரியவந்தால், இவர்களுக்கு ₹20 லட்சம் வரம்பு பாதுகாப்பு கிடையாது. அந்தப் பணத்தின் மூலத்தைப் பொறுத்து வரி மற்றும் அபராத நடவடிக்கைகள் கண்டிப்பாக வரும்.

வெளிநாட்டில் உள்ள பணம் உறவினர்கள் அனுப்பியது என்று கூறி தப்பிக்க முயன்றாலும், அதற்கான உண்மையான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் சிக்கல் தான். வெளிநாட்டில் முறையாகச் சம்பாதித்து சேமித்த பணத்தை வைத்தவர்கள், டெக்னிக்கல் காரணங்களால் வெளிநாட்டு சொத்துகளை ITR-ல் குறிப்பிடத் தவறியவர்களுக்கு நிவாரணம் அளிக்கவே வருமான வரித்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கருப்பு பணம் வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக சிக்கலான அறிவிப்பு தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+