கல் தூணில் தீபம் ஏற்றலாம் என்று சொன்னேனா? சர்ச்சையை கிளப்பிய அறிக்கை! திருமாவளவன் புது விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்த நிலையில், இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கொடுத்திருந்த அறிக்கை சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

தவெக ஆட்சி அமைய மட்டுமல்லாது, ஆட்சி அமைந்த பின்னர் அமைச்சரவையில் இடம் பெற்றும் ஆதரவு கொடுத்து வருகிறது விசிக. ஆனால், அரசின் எல்லா செயல்களுக்கும் விசிக துணை போவதாகவும், மாற்றுக் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக வைக்கவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

Thirumavalavan

இப்படி இருக்கையில் தீபம் விஷயத்தில் திருமாவளவன் கொடுத்த அறிக்கை, விவாதங்களை கிளப்பியிருந்தது. அதில், நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை விவரித்த அவர்.. "தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

'தீர்ப்பைச் செயல்படுத்தும்போது' என்று திருமாவளவன் கூறியிருப்பது.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புவதாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். "திருப்பரங்குன்றம் மலையிலுள்ள 'அளவைக்கல்' எனப்படும் கல்தூணில் கார்த்திகை தீப நாளன்று ( நவ-24) தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் 'மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்'( CISF ) உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான அறிவுறுத்தலையும் செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.

அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். எனினும், கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற பொருள்படும்படி அறிக்கை அமைந்ததற்கு வருந்துகிறேன்.

நடைமுறை சாத்தியக் கூறுகளிலிருந்து முன்னுணர்ந்து அவ்வாறு சொல்லப்பட்டதேயன்றி வேறில்லை. குறிப்பாக, இது மதவெறிக்கும்பலின் 'வெற்றிக் களியாட்ட வன்முறைக்கு' இடமளித்துவிடக்கூடாதே என்கிற கவலையிலிருந்து சொல்லப்பட்ட கருத்தேயாகும்.

எனவே, இதனை எதிர்மறையாகப் புரிந்துகொள்ள வேண்டாமென, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எமது நலம்விரும்பிகளான தோழமை சக்திகளுக்கும் தெளிவுப்படுத்த விழைகிறேன். வழக்கம்போல நமக்கு எதிராகப் பரப்பப்படும் திரிபுவாதக் கற்பிதங்களைப் பொருட்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறேன்." என்று இன்று காலை விளக்கமளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+