புதுக்கோட்டை அரசு ஐடிஐயில் வேலை.. 8 ஆம் வகுப்பு தகுதி! மாதம் 58 ஆயிரம் சம்பளம்! பட்டைய கிளப்புங்க
சென்னை: புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது முற்றிலும் அரசு நிரந்தர பணியாகும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.58,100 சம்பளம் கிடைக்கும். இந்த பணிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ)யில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர் காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி
இந்த பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை SC (A) / SC / ST 35, MBC / BC 32, OC- 30 மாற்று திறனாளிகளுக்கு கூடுதலாக 10 ஆண்டுகளும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கு விதிகளின் படி, கூடுதல் ஆண்டுகள் சலுகை உண்டு. ஆதரவற்ற விதவைகளுக்கு கூடுதலாக 5 ஆண்டுகளும் அவரவர் இனத்திற்கேற்ப வயது வரம்பில் சலுகை உண்டு.30.09.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு
தேர்வு செய்யப்படுவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ் நகல்களுடன் சுயசான்றொப்பமிட்டு (Self Attested) 17.11.2026 அன்று மாலை 5.45-க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும். அஞ்சல் மூலமாகவோ அல்லது அலுவலக வேலை நாட்களில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்,
திருச்சி மெயின்ரோடு, திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை, 622 002
அதிகாரப்பூர்வ இணையதளம்
தகுதியில்லாத விண்ணப்பங்கள், காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு http://pudukkottai.nic.in இணையதளத்தினை பார்வையிடலாம்.
எழுத்து தேர்வு கிடையாது
இந்த பணிக்கு தேர்வு செய்ய எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மட்டுமே நடைபெறும்.
நேர்முகத்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
8 ஆம் வகுப்பு கல்வித்தொகுதி கொண்ட பணியிடங்கள் என்றாலும் இந்த பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. இதனால், 2 பணியிடங்களுக்கும் கடுமையான போட்டி தேர்வர்கள் மத்தியில் நிலவ வாய்ப்பு உள்ளது.




Click it and Unblock the Notifications
