சென்னை மெட்ரோவில் சூப்பர்வைசர் வேலை.. எக்சாம் கிடையாது.. 31 ஆயிரம் சம்பளம்! செம சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு எக்ஸாம் கிடையாது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
மத்திய மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமாக மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளது. சென்னை நகரின் போக்குவரத்துக்கு இன்றியமையாததாக உள்ள மெட்ரோ ரயில் சேவைகள் இந்த நிறுவனத்தின் மூலமே இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எக்சாம் இல்லாமல் நேர்முகத்தேர்வு மூலமாக மட்டும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள், கல்வித் தகுதி விவரம்:
சூப்பர்வைசர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை அரசு அங்கீகரிக்கப்பட்ட பாலி டெக்னிக் கல்வி நிலையத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் , தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில் ஒருங்கிணைந்த, மின் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் / நுண்செயலி, மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, கருவியியல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் கருவியியல் பொறியியல் ஆகிய பாடங்களில் மூன்றாண்டு கால டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர் அறிவிப்புக்கான லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
01.10.2026 அன்று தேதிப்படி 18 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.31,193 வழங்கப்படும்.
தேர்வு முறை:
சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வாக் இன் இண்டர்வியூ நடைபெறும் தேதி, கல்வித்தகுதி வாரியாக பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10, 11, 12, 16, 20, 21 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வானது நடைபெறும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்
Govt. Industrial Training Institute,
Labour Colony,
SIDCO Industrial Estate,
Guindy, Chennai-600032- என்ற இடத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
தேர்வு அறிவிப்பை படிக்க:
https://backend.delhimetrorail.com/documents/12067/SUPERVISOR-2026-DMIL-HR-Rectt.-CMRL-PHASE-II-SUP-2026.pdf




Click it and Unblock the Notifications
