உலகில் அதிக தங்கம் வைத்து இருக்கும் நாடு எது.. லிஸ்டில் இந்தியா உள்ளதா? ரியல் ஷெரு பாய் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கணிக்கவே முடியாத அளவுக்கு தகிடுதத்தம் போட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், உலகில் தங்கம் கையிருப்பு அதிகம் வைத்து இருக்கும் டாப் 10 நாடு எது? இந்தியா இந்த பட்டியலில் உள்ளதா? முதலிடம் வகிக்கும் அந்த ரியல் ஷெரு பாய் யார்? என்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

சர்வதேச அளவில் தங்கம் என்பது ஒரு நாட்டின் பண மதிப்பையும் நிர்ணையிக்க கூடிய சக்தியாக உள்ளது. இறக்குமதி செலவுகளை கட்டுப்படுத்தவும் உள்நாட்டு பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடையாமல் இருக்கவும் தங்கம் கையிருப்பு ஒரு நாட்டிற்கு பொருளாதார பாதுகாப்பு கவசமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு நாடுகளும் தங்க கையிருப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றன.

gold Is India on the list who is the real Sheru Bhai

தாறுமாறாக சரியும் தங்கம் விலை

மஞ்சள் உலோகம் என்று அழைக்கப்படும் தங்கத்திற்கு வேறு எந்த நாட்டை விடவும் இந்தியாவில் அதீத முக்கியத்துவம் என்று கூட சொல்லலாம். ஏனெனில், நம் நாட்டில் சாதாரண மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் தங்கத்தை ஆபரணமாக அணிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்தவர்களை எல்லாம் ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் அளவிற்கு தற்போது விலையானது ஆட்டம் கண்டு வருகிறது. உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் வைத்து இருக்கும் நாடுகள் எவை எவை என்று இங்கே பார்க்கலாம்.

அமெரிக்கா:

உலகில் தங்கம் அதிகம் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் மட்டும் 8,133.5 டன்கள் தங்கம் உள்ளது. அமெரிக்கா பல ஆண்டுகளாக தங்க கையிருப்பை அதிகரித்து தொடர்ந்து டாப்பில் உள்ளது. அந்த நாட்டிடம் உள்ள தங்கத்தின் பெரும் பகுதி ஃபோர்ட் நாக்ஸ் என்ற அரசு பாதுகாப்பு மையத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் 2, 3 மற்றும் 4-வது இடத்தை ஐரோப்பிய நாடுகள் வகிக்கின்றன. அதாவது ஜெர்மனி நாட்டிடம் 3,349.3 டன் தங்கம் உள்ளது. இத்தாலியிடம் உள்ள கையிருப்பு தங்கம் 2,451 டன் ஆகும். பிரான்சிடம் 2,437 டன் தங்கம் உள்ளது. ஐரோப்பாவின் வலுவான பொருளாதாரம் மற்றும் அன்னிய செலவாணிக்கு அந்த நாடுகள் தங்க கையிருப்பை அதிகமாக வைத்துள்ளதும் முக்கியமாக காரணமாக உள்ளது.

சீனா, ரஷ்யா

அதிக தங்கம் கையிருப்பு வைத்து இருக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா 5-வது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் பெரும் பொருளாதார வல்லமை படைத்த நாடாக உருவாகி வரும் சீனாவிடம் 2,346.4 டன் தங்கம் உள்ளது. அதேபோல், ரஷ்யாவிடம் சுமார் 2,326.5 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. உலகின் அதிக தங்கக் கையிருப்பைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்த இரு நாடுகளும் 5-வது மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளன. 2021 ஆம் ஆண்டில் இருந்தே சீனா தனது கையிருப்பு தங்கத்தை கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சர்லாந்து:

இந்த பட்டியலில் 7 வது இடத்தை சுவிட்சர்லாந்து பிடித்துள்ளது. அளவில் சிறிய நாடாக இருந்தாலும் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது. அந்த நாட்டிடம் தோராயமாக 1,039.9 டன் தங்கம் உள்ளது. இந்தியாவை விட 159 டன் அதிகமாக சுவிட்சர்லாந்திடம் தங்கம் உள்ளது. சுவிஸ் தேசிய வங்கி தனது கையிருப்பில் வெளிநாட்டு நாணயச் சொத்துக்களுடன் தங்கத்தையும் கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு 8-வது இடம்

வளரும் நாடான இந்தியா இந்த பட்டியலில் 8-வது இடம் வகிக்கிறது. இந்தியாவிடம் 880.5 டன் தங்கம் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவிடம் கூடுதாலாக 126 டன் தங்கம் தற்போது உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கக் கொள்முதல் மற்றும் அதன் ரிசர்வ் மேலாண்மை காரணமாக தற்போது தங்க கையிருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், இது வெறும் அலுவல் பூர்வமான மதிப்புதான்.

ரியல் ஷெரு பாய் யார்?

இந்தியாவில் தங்க நகைகளாகவும் கோவில்களில் ஆபரணங்களாகவும் பெருமளவும் தங்கம் உள்ளது. இந்த தங்கத்தின் அளவு இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் இருப்பு கணக்கோடு சேரவில்லை. இதனால், இவற்றை எல்லாம் சேர்த்தால் இந்தியாவின் தங்க கையிருப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அதிக தங்கம் வைத்து இருக்கும் நடுகளின் பட்டியலில் 9-வது இடத்தில் ஜப்பான் உள்ளது. ஜப்பானிடம் 646 டன் தங்கமும், துருக்கியிடம் 791.4 டன் தங்கமும் உள்ளது.

உலக தங்க கவுன்சிலின் அக்டோபர் 2026 தரவுகளின் படி இந்த பட்டியல் தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால், சோஷியல் மீடியாவில் கோடி கோடியே கோடி கோடி லட்சம் கோடி சொத்து வைத்து கெத்து காட்டும் ஷெரு பாய்க்கு போட்டியாக இருப்பது தற்போது அமெரிக்காதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+