Gold Price: தங்கம் விலை இன்னும் 10 சதவீதம் குறையும்.. 90 ஆயிரத்துக்கு கீழ் போகும்.. ஆனந்த் சீனிவாசன் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினம் தினம் புதுப்புது உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை தற்போது படுத்தேவிட்டதய்யா என்று சொல்கிற அளவுக்கு தாறுமாறாக சரிந்துள்ளது. இனிமேல் ஒரு லட்சத்திற்கு கீழ் தங்கம் குறையுமா? என யாரும் நினைத்து பார்த்திராத நிலையில் ஒரு சவரன் மீண்டும் ரூ. 97 ஆயிரத்துக்கு சரிந்துள்ளது.

இந்நிலையில் இவ்வளவு தான் தங்கம் விலை குறையுமா? இல்லை இன்னும் அதிரடியாக குறையுமா? என நகை பிரியர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் அடுத்த 6 மாதங்களுக்கு தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், இன்னும் 10 சதவீதம் அதாவது ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் குறைய வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Gold price to fall by another 10 percent will drop below 90 000 Anand Srinivasan prediction

ரூ.1.34 லட்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. அதாவது 1.1.2025 ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனை ஆனது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டப்படியே இருந்தது. ஒரே வருஷத்தில் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவு அதிகரித்து நடப்பு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்துக்கு வந்தது.

அதோடு நிற்காத தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக அதிகரித்து ஒரு லட்சத்தை தாண்டியது. இனி தங்கத்தை கனவில் தான் நினைத்து பார்க்க முடியும் என ஏழை, எளிய மக்கள் ஆதங்கப்படும் அளவுக்கு தாறுமாறாக உயர்ந்தது. அதே மாதம் 29 ஆம் தேதி வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சபட்சமாக ரூ.1.34 லட்சத்தை தொட்டது. இதனால் நகைப் பிரியர்கள் கலங்கிப் போயினர்.

ஒரு லட்சத்திற்கு கீழ் வந்தது

ஆனால் பிப்ரவரி மாதம் இறுதியில், ஈரான் அமெரிக்கா போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை மீண்டும் சரிய தொடங்கியது. அதன் பிறகு புதிய வரலாற்று உச்சம் என்ற 1.34 லட்சத்தை தாண்டவில்லை. ஆனால் ரூ.1.20 லட்சம் என்ற விலையை மையமாக கொண்டு விலை நீடித்து வந்தது. ஆனால் தற்போது இந்த விலையும் தாறுமாறாக சரிந்து ரூ.1.10 லட்சம் என மாறியது. கடந்த மாதமும் தொடர்ச்சியாக சரிந்த தங்கம் விலை தற்போது ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

இன்னும் 10 சதவீதம் குறையும்

இனி எங்கே தங்கம் குறையப் போகிறது என நினைத்த நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்று ரூ.97 ஆயிரத்துக்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் இதே நாள் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்னும் எவ்வளவு குறையும் என பலரும் எதிர்பார்த்து உள்ளனர். திடீரென உயர்ந்துவிடுமோ எனவும் அச்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்கம் விலை இன்னும் 10 சதவீதம் அதாவது ரூ.90 ஆயிரத்திற்கும் கீழ் குறையும் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூறுகையில், முன்னாடியே நான் 6 மாதத்திற்கு முன்பே சொன்னப்படி தான் தங்கம் விலை இப்போது குறைந்துள்ளது. கணிசமாக தங்கம் விலை இறங்கி இருக்கிறது. இன்னும் இறங்குவதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

அடுத்த 6 மாதங்கள் குறையும்

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு தொடர்ந்து சரிய வாய்ப்பு உள்ளது. இன்னும் 10 சதவீதம் தங்கம் விலை சரிய வாய்ப்பு உள்ளது. நேரம் நல்லா இருந்தால் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் குறையவும் வாய்ப்பு இருக்கு. ஆனால் உறுதியாக இறங்கும் என சொல்ல முடியாது. அடுத்த 4 முதல் 6 மாதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. சீனா எவ்வளவு தங்கம் வாங்கும் என தெரியாது. எனவே அதை பொறுத்து தங்கம் விலை குறையும். இப்போது நகை வாங்குபவர்கள் வாங்கலாம்.. என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+