இது கையா இல்லை பிரிண்டரா? ஆந்திராவில் கணினியே பொறாமைப்படும் அளவுக்கு அழகான கையெழுத்து! சஞ்சனா சாதனை

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவை சேர்ந்த 9ஆவது வகுப்பு படிக்கும் மாணவியின் கையெழுத்து டைப் அடித்தது போன்ற ஒரு ஸ்டைலில் இருப்பது டிரென்டாகி வருகிறது. ஏற்கெனவே நேபாளத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் கையெழுத்து அழகாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜயவாடா அருகே சிங்கணகுடு பகுதியில் செயிண்ட் வின்சென்ட் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவி சஞ்சனா. இவரது கையெழுத்துதான் டிரென்டாகி வருகிறது.

இவர் எழுதும் எழுத்துக்கள் அப்படியே டைப் அடித்து பிரிண்டர் போட்டது போல் உள்ளது. மாணவி எழுதும் கையெழுத்து அத்தனை அழகாக அடித்தல் திருத்தல் இல்லாமல் எல்லாமே ஒன்று போல் இட்டாலியன் ஸ்டைலில் சாய்ந்து சாய்ந்து மிகவும் அழகாக இருக்கிறது.

handwritting

150 மில்லியன்

இவரது கையெழுத்து அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இது 150 மில்லியன் பார்வைகளையும் கடந்து டிரென்ட்டாகிறது. இந்த கையெழுத்தை பார்க்கும் நெட்டிசன்கள், என்னமா உனக்கு இருப்பது கையா, இல்லை பிரிண்ட்டிங் மெஷினா என வாயை பிளக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நேபாள மாணவியின் கையெழுத்து உலகின் மிக அழகான கையெழுத்து என பாராட்டப்பட்டிருந்தது. பிரகிருதி மல்லா என்ற மாணவிதான் அந்த அழகான கையெழுத்துக்குச் சொந்தக்காரர்.

இவர் நேபாளத்தில் உள்ள சைனிக் வாசியா மகாவித்யாலயாவில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவருக்கு 14 வயது இருக்கும். அந்த கட்டத்தில் அவர் எழுதிய கையெழுத்துதான் வைரலானது. இணையம் முழுவதும் ஈர்க்கப்பட்டது.

handwritting

மாணவி கையெழுத்து

அந்த மாணவியின் கையெழுத்தை கண்டு வியந்த ஒருவர் உடனடியாக அதை புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பினார். இவரது கையெழுத்தை பார்த்து கையெழுத்து நிபுணர்கள் கூட பெரும் ஆச்சரியமடைந்தனர். இவரது கையெழுத்து மீண்டும் ஒரு முறை வைரலானது. கணினி தட்டச்சு செய்திருப்பது போல் அத்தனை நேர்த்தியாக அவரது கையெழுத்து இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

பிரகிருதி மல்லா

பிரகிருதி மல்லாவின் கையெழுத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் கூட சமமாக இருப்பதாக நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து கூறினர். எனவே அவரது இந்த கையெழுத்து நேபாளத்தை மட்டும் அல்ல உலகளவில் புகழடைந்தது. நேபாள அரசு இவரின் கையெழுத்தை அங்கீகரித்துள்ளது. நேபாளத்தின் சிறந்த கையெழுத்து என்றும் கூறப்பட்டது. அந்த சிறுமிக்கு ஆயுதப்படையினரால் விருது வழங்கப்பட்டது. பிரகிருதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51 ஆவது ஆண்டு தினத்தையொட்டி அவர்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதியிருந்தார்.

ஆந்திரா சஞ்சனா

அந்த வரிசையில் ஆந்திராவை சேர்ந்த சஞ்சனாவும் தனது கையெழுத்தால் ஒரே இரவில் புகழ்ச்சி அடைந்துள்ளார். இவ்வாறு இந்த மாணவிகளின் கையெழுத்தை பார்த்தால் யாருக்குத்தான் அதை பாராட்ட தோன்றாது. கணினியே இவர்களது கையெழுத்தை பார்த்து ஆஹா, நம்மால் கூட இவ்வளவு ஸ்டைலாக டைப் அடிக்க முடியாதே என பொறாமைப்படும் அளவுக்கு அத்தனை நேர்த்தி!

நல்ல கையெழுத்து

கையெழுத்து நல்லா இருந்தால்தான் தலையெழுத்து நன்றாக இருக்கும் என்பார்கள். கையெழுத்து நல்லா இல்லாததால் கூட சில மாணவர்கள் எழுதுவதை வெறுப்பார்கள். அவர்களால் ஒப்புவிக்க முடியும். எல்லாமே நன்றாக பேசுவார்கள். ஆனால் எழுதுவது என்றால் 10 அடி தூரம் ஓடுவார்கள். எத்தனையோ பேருக்கு கையெழுத்து சரியில்லாததால் படிப்பின் மீது வெறும் ஏற்பட்டிருக்கிறது. இதை நாம் நம்மில் சிலரது வீடுகளில் கூட பார்த்திருப்போம். கையெழுத்து நன்றாக இருக்காது என்பதால் வங்கிகளிலும், பள்ளி கல்லூரிகளிலும் ஒரு form fill up செய்ய கூட தயக்கம் காட்டுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+