15 பேரை கொன்ற கள்ளச்சாராயம்.. 180க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. மணிப்பூரில் சோகம்

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 15 பேர் பலியாகி உள்ளனர். 180க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது உடல்நலம் மோசமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் சண்டேல் மாவட்டம் சாக்பிகராங் பகுதியை சுற்றிய கிராமங்களை சேர்ந்தவர்கள் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டனர். கடந்த 18 ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 200க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

manipur spurious liquor

அவர்கள் உடனடியாக சாக்பிரகாங் சுகாதார மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது கள்ளச்சாராயம் குடித்ததில் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து ஒவ்வொருவரும் இறந்தனர். சுகாதார மையம் மற்றும் வீடுகளில் இருந்தபடியே கடந்த 48 மணி நேரத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 180க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் சிலரது உடல்நலம் மோசமாகி உள்ளது. இதனால் உயிர் பலி அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி சண்டேல் மாவட்ட போலீசார் கூறுகையில், ''காக்சிங் மாவட்டத்தில் உள்ள சுக்னு பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்துகுடித்துள்ளனர். இந்த கள்ளச்சாராயம் சண்டேல் மாவட்டத்தில் தயாரிக்கப்படவில்லை. இப்போது 15 பேர் பலியாகி உள்ளனர். இதில் 5 பேர் சுக்னு காவல்நிலைய எல்லைக்குட்பட்டு வசித்து வந்தவர்கள் ஆவார்கள்'' என்றார்.

இதுதொடர்பாக சண்டேல் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. யாரும் கள்ளச்சாராயம் வாங்கி அருந்தக்கூடாது. அதில், ''தற்போது இறந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கிராமத்தில் காய்ச்சி விற்பனை செய்யப்படும் சாராயம் உள்ளிட்ட மதுவகைகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும்.

யாராவது வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, கண்பார்வை மங்குதல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் யுனாம்கிம்சந்த் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கிக்கு இம்பால் பகுதியில் உள்ள பபினா மருத்துவமனை மற்ம் மேற்கு இம்பாலில் உள்ள ஷிஜா மருத்துவுமனை மறஅறம் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+