திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வந்துருச்சா.. திண்டுக்கல் சீனிவாசன் கேட்டாரு பாருங்க கேள்வி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திமுக ஆட்சியில் தொடங்கிய திருப்பரங்குன்றம் கோயில் மலை தீபம் விவகாரம், தவெக ஆட்சிக்கு வந்தும் ஓயவில்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக, தவெக அமல்படுத்தவில்லை என்பது விமர்சனமானது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவும், எதிர்ப்பும் கலந்துகட்டி வருகின்றன. தனக்கு அப்படி ஒரு தீர்ப்பு வந்தது தெரியவில்லை என சொல்லிவிட்டு பிறகு அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் அதை சமாளித்து பேசியுள்ளார்.

திண்டுக்கலில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தனியார் துறைக்கு தாரைவார்த்த ஒப்பந்ததாரர்களின் வேலையை கண்டித்து, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என போராடும் தொழிலாளர்களுக்கு அதிமுக ஆதரவு கொடுத்துள்ளோம். தமிழகம் முழுவதும் அவர்களின் போராட்டத்தில் அதிமுக பங்கெடுத்துள்ளது.

dindigul-sreenivasans-reaction-on-thiruparankundram-issue-went-viral

6 மாதங்களில் லட்சணம்

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தவெக சொன்ன பொய் வாக்குறுதிகளை, பழைய பேப்பரை எடுத்து பாருங்கள். 100க்கு 100 பொய் ஆட்சி நடக்கிறது. துப்புரவு தொழிலாளர்களுக்கு அவர்கள் கேட்கும் அனைத்தையும் செய்து கொடுப்போம் என கூறினார். சுய உதவிக்குழுக்கள் மூலம் பணி செய்து கொடுப்போம், ஒப்பந்தமுறையை ஒழிப்போம் என்றார்கள். அதை நிறைவேற்றவில்லை. எதற்கெடுத்தாலும் தவெக ஆட்சிக்கு நேரம் வேண்டும் என்கிறார்கள். 6 மாதங்களிலேயே அவர்களின் லட்சணம் தெரிந்துவிட்டது.

இன்னும் 5 ஆண்டுகள் கழித்துதான் கேட்க வேண்டுமா. எல்லாரும் செத்து சுண்ணாம்பாகிவிட்டார்கள். ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் ஆகிவிட்டது. பருப்பு, எண்ணெய் விலை பற்றியெல்லாம் உளவாளிகள் அவரிடம் சொல்கிறார்களா என தெரியவில்லை. விலைவாசியை முதலில் குறையுங்கள். ஹைதராபாத்தில் இருந்து கொள்ளையடிப்பதற்காக ஒப்பந்தமுறையை கொண்டு வந்துள்ளனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். செஞ்சி சிறுமியை ஒரு மாதத்திற்கு மேலாகியும் கண்டறிய முடியவில்லை.

திருப்பரங்குன்றம் விவகாரம்

மருத்துவம், போக்குவரத்து பல்வேறு துறைகளை ஒப்பந்தத்திற்கு விட்டு கமிஷன் வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள். அரசின் கையாளதத்தனத்தை தடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சொல்கிறார்கள். உண்மையில் அப்படி ஒரு தீர்ப்பு வந்தது எனக்கு தெரியாது. வந்திருந்தால் மகிழ்ச்சி. நீதித்துறைக்கு எங்களின் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். நீதி வென்றிருக்கிறது. இறைவன் இருக்கிறார் என்பது நிரூபிக்கப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+