ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்.. தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்கள்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இனிமேல் ஆண்டுக்கு 3 சமையல் கேஸ் சிலிண்டர்களை இலவசமாகப் பெறும் வாய்ப்பு ஒரு கோடி குடும்பங்களுக்கு கிடைக்க போகிறதாம். முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள இந்த திட்டத்தில் யார் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்? பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்? இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது...!!

தவெக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல் கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.. அதுமட்டுமல்ல. இதன் மூலம் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Tamil Nadu Free Gas Cylinder Scheme

6 சிலிண்டர்கள்

இதையடுத்து, இந்த திட்டத்தில் யாருக்கெல்லாம் இலவச சிலிண்டர் கிடைக்கும் என்பதை முடிவு செய்ய தமிழக அரசு பயனாளிகளின் விபரங்களைத் திரட்டி வருகிறது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்கள், மகளிர் உரிமைத்தொகையாக மாதம் 1,000 ரூபாய் பெறுவோர் ஆகியோரின் விபரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

அதேபோல், ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய் வரை உள்ள குடும்பத்தினரும் இந்த திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.

கேஸ் இணைப்புகள்

தமிழகத்தில் தற்போது 2.40 கோடி வீட்டு சமையல் கேஸ் இணைப்புகள் உள்ளன. இதில் ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டும் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 1.10 கோடி. இவர்களில் 42 லட்சம் இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை. முதல்வர் அறிவித்துள்ள இலவச சிலிண்டர் திட்டத்தில் சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கில் பணம்

இலவச சிலிண்டர் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்தும் தமிழக அரசு உயரதிகாரி ஒருவர் விளக்கம் தந்துள்ளார்.. அவர் சொல்லும்போது, "இலவச காஸ் சிலிண்டருக்கான தொகையை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில், தமிழக அரசு செலுத்தும். ஏற்கனவே உள்ள திட்டங்களில் பயன்பெறுவோர் அடிப்படையில், இலவச காஸ் திட்டத்திற்கு பயனாளிகளை அடையாளம் காணும் பணி நடக்கிறது.

ஆனாலும், அனைத்து குடும்பத்தினரிடமும் விண்ணப்பங்களைப் பெற்று, அதனடிப்படையிலும், பயனாளிகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே அரசு நலத்திட்டங்களில் பயன்பெறுவோரின் விபரங்களை வைத்து பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில், அனைத்து குடும்பத்தினரிடமும் விண்ணப்பங்களைப் பெற்று அதனடிப்படையிலும் பயனாளிகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது" என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆக, ஏற்கனவே உள்ள நலத்திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்லாமல், புதிதாக விண்ணப்பிப்பவர்களும் இந்த திட்டத்தில் சேர வாய்ப்பு இருக்கலாம் என தெரிகிறது.. எனினும், விண்ணப்பிக்கும் தேதி, விண்ணப்பிக்கும் முறை, ஒரு சிலிண்டருக்காக வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை செலுத்தப்படும் என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+