திருவண்ணாமலைக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் விவரம்.. திருக்கார்த்திகை தீபம் பார்க்க நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை : உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 16 சிறப்பு மெமு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை, தாம்பரம், வேலூர், விழுப்புரம் பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 12 தொடங்கிய நிலையில், நவம்வர் 28 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான காா்த்திகை மகா தீப விழா வரும் செவ்வாய்கிழமை ( 24-ஆம் தேதி) நடைபெற உள்ள நிலையில், 50 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Karthigai Deepam Special trains

சிறப்பு ரயில்கள் விவரம்

1. சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மெமு (06143)

சென்னை கடற்கரையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு காலை 11.40 மணிக்கு திருவண்ணாமலை போய்ச்சேரும்.

வழித்தடம் - பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, வேலூர் கான்ட்

2. திருவண்ணாமலை - சென்னை கடற்கரை மெமு (06144)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை போய்ச்சேரும்.

3. திருவண்ணாமலை - காட்பாடி மெமு (06145)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3 மணிக்கு காட்பாடி போய்ச்சேரும்.

வழித்தடம் - போளூர், ஆரணி சாலை, வேலூர் கான்ட்

4. காட்பாடி - திருவண்ணாமலை மெமு சிறப்பு (06146)

காட்பாடியிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு திருவண்ணாமலை போய்ச்சேரும்.

5. திருவண்ணாமலை - காட்பாடி சிறப்பு (06147)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு காட்பாடி போய்ச்சேரும்.

வழித்தடம் - போளூர், ஆரணி சாலை, வேலூர்

6. காட்பாடி - திருவண்ணாமலை மெமு சிறப்பு (06148)

காட்பாடியிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு திருவண்ணாமலை போய்ச்சேரும்.

7. தாம்பரம் - திருவண்ணாமலை மெமு (06093)

சென்னை தாம்பரத்திலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு பகல் 1.30 மணிக்கு திருவண்ணாமலை போய்ச்சேரும்.

வழித்தடம் - செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோயிலூர் (இந்த ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும்)

8. திருவண்ணாமலை - தாம்பரம் மெமு (06094)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரம் போய்ச்சேரும்.

9. திருவண்ணாமலை - விழுப்புரம் மெமு (06097)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு விழுப்புரம் போய்ச்சேரும்.

திருக்கோயிலூரில் மட்டுமே நிற்கும்

10. விழுப்புரம் - திருவண்ணாமலை மெமு (06098)

விழுப்புரத்திலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 8.00 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலை போய்ச்சேரும்.

11. திருவண்ணாமலை - விழுப்புரம் மெமு (06095)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு விழுப்புரம் போய்ச்சேரும்.

திருக்கோயிலூரில் மட்டுமே நிற்கும்

12. விழுப்புரம் - திருவண்ணாமலை மெமு (06096)

விழுப்புரத்திலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை போய்ச்சேரும்.

13. திருவண்ணாமலை - விழுப்புரம் மெமு (06129)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் போய்ச்சேரும்.

வழித்தடம்: வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், ஆண்டம்பாளையம், தண்டரை

14. விழுப்புரம் - திருவண்ணாமலை மெமு (06130)

விழுப்புரத்திலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 10.10 மணிக்கு காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை போய்ச்சேரும்.

15. விழுப்புரம் - வேலூர் கான்ட் மெமு (06062)

விழுப்புரத்தில் இருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் கான்ட் போய்ச்சேரும்.

16. வேலூர் கான்ட் - விழுப்புரம் மெமு (06061)

வேலூரிலிருந்து இருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு காலை 5.00 மணிக்கு விழுப்புரம் போய்ச்சேரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+