அத்தை மகள் – மகனை இனி திருமணம் செய்ய முடியாதா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''ரத்த உறவுகளுக்கு இடையே திருமணம் செய்து கொள்வதால் குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படுவதோடு, மரபணு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் இந்த திருமணங்களை கட்டுப்படுத்த வேண்டும்'' என தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பெங்களூவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி சார்வி என்பவர் வழக்கறிஞர் அஞ்சுமன் திரிபாதி வழியாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''ரத்த உறவுகளை திருமணம் செய்யும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. இது முன்பு இருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பதற்காகவே இப்போதும் தொடர்கிறது.ஆனால் ரத்த உறவுகளுக்கு இடையேயான திருமணம் குழந்தை பிறப்பை கேள்விக்குள்ளாவதோடு, மரபணு பாதித்த குழந்தை பிறக்கும் வாய்ப்பை அதிகரிப்பதாக சொல்கிறார்கள்.

Blood Relatives Marriage

ரத்த உறவுகள் இடையேயான திருமணங்கள் 'ஹோமோசைகாசிட்டி' எனும் நிலைமை கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு சார்ந்த குறைபாடுகள், குழந்தைகளின் உறுப்புகளில் குறைபாடு, உணர்ச்சி குறைபாடு, வளர்ச்சியில் சிக்கல், குழந்தை பருவத்திலேயே மரணம் உள்ளிட்டவற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ரத்த உறவினர்கள் இடையேயான திருமணத்தை அனுமதிக்க வேண்டுமா? என்று பரிசீலனை செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி மோகனா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''ரத்த உறவுகளுக்கு இடையேயான திருமணத்தை நீதிமன்றத்தால் முறைப்படுத்த முடியாது. மூக சீர்த்திருத்த சட்டங்கள் வழியாக இத்தகைய திருமணங்களை முறைப்படுத்துவது என்பது முழுமையாக சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளது.

இருப்பினும் நெருங்கிய ரத்த உறவினர்களுக்கு இடையேயான திருமணங்கள் தொடர்பாக சட்டம் இயற்றுவது எவ்வளவு அவசியம் என்ற கேள்வி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்டுகிறது. இந்த விவகாரம் குறித்து சட்டம் இயற்றுவதன் அவசியம் பற்றி பரீசிலிக்கமாறு மத்திய அரசை வலியுறுத்த மட்டுமே நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம். இதுதொடர்பாக அரசுக்கு உத்தரவிடவும் விரும்பவில்லை. மாறாக விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்த விரும்புகிறோம்'' என கூறினர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த வலியுறுத்தலுக்கு மத்திய அரசு செவிசாய்த்து சட்டம் கொண்டு வந்தால் ரத்த உறவுகளுக்கு இடையேயான திருமணத்துக்கு சிக்கல் வரலாம். அப்படியென்றால் இனி வரும்காலங்களத்தில் தாய்மாமா மகள், மகன், அப்பா வழி அத்தை (அப்பாவுடன் பிறந்த சகோதரி) மகள், மகன் ஆகியோரை திருமணம் செய்ய முடியாத நிலை வரலாம். ஆனால் தற்போது வரை ரத்த சொந்த உறவினர்கள் இடையேயான திருமணத்தை கட்டுப்படுத்தவோ, தடை செய்யவோ மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+