இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடும் டிரம்ப்! சீனா போய் வந்தவருக்கு என்ன ஆச்சு? விசித்திர உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சீனா சென்று திரும்பி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தியாளர் சந்திப்பில் டேட்டா சென்டர்கள் குறித்து விசித்திரமான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இது இந்தியாவுக்கு வரும் முதலீடுகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக அமையும் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரித்துள்ளனர்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியாவை பற்றி 2 விஷயங்களை பேசியிருந்தார். ஒன்று நேரடியாக இந்தியாவை பாராட்டியிருந்தார். இந்தியாவின் ஜிடிபி சூப்பராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இரண்டாவது, இந்தியாவுக்கு மறைமுகமாக தலைவலியை கொடுத்திருக்கிறார்.

Trump

அதாவது அமெரிக்காவின் டெக் நிறுவனங்கள் தங்களின் டேட்டா சென்டர்களை, உள்நாட்டிலேயே அமைக்க வேண்டும். ஒருவேளை வெளிநாட்டில் டேட்டா சென்டர்களை அமைக்கப்படுகிறது எனில்.. அதற்கான கடுமையான வரி விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதுதான் தற்போது இந்தியாவுக்கு பிரச்சனை. சர்வதேச அளவில் டேட்டா சென்டர் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அமெரிக்காவின் அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்கள் சென்னை, மும்பை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், புதிய டேட்டா சென்டர் விரிவாக்க திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நேரத்தில் வந்து குட்டையை குழப்புவதை போல.. வெளிநாட்டில் டேட்டா சென்டர்களை அமைத்தால்.. கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் பேசியிருப்பது நமக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

சென்னையில் டேட்டா சென்டர்கள் அமைக்கதான் பெரும்பாலான டெக் நிறுவனங்கள் விரும்புகின்றன. ஒரு மெகாவாட் டேட்டா சென்டருக்கு அதிகபட்சமாக ரூ.60 கோடி வரை செலவாகும். அமேசான், மைக்ரோசாப்ட் குறைந்தது 50-100 மெகாவாட் அளவில் டேட்டா சென்டர்களை அமைக்கும். அப்படியெனில் ரூ.6,000 கோடி வரை முதலீடு கிடைக்கும். டேட்டா சென்டர்கள் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும்.. தமிழ்நாட்டில் காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு அதிக அளவுக்கு முதலீடுகள் கிடைக்கும்.

இப்படியான வாய்ப்புகளுக்குதான் வாய்க்கரிசி போட்டிருக்கிறார் டிரம்ப். அதேபோல இந்தியாவிலிருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும் இந்தியாவுக்குள்தான் சேமிக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் இருக்கிறது. வெளிநாட்டு டேட்டா சென்டர்களை டிரம்ப் எதிர்க்கிறார் எனில்.. டெக் நிறுவனங்கள் இந்திய அரசின் சட்டத்தை மீற வேண்டி வரும். அல்லது அதற்கான தனியாக ஏற்பாடு செய்ய வேண்டி வரும். இதனால்.. இந்திய நிறுவனங்களுக்கு கிளவுட் சேவை கட்டணங்கள் அதிகரிக்கும்.

பாசிட்டிவ் பாயிண்ட்கள்

இதெல்லாம் நம்ம பக்கம் இருக்கும் பிரச்சனை. அந்த பக்கம்.. அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு இதைவிட பெரிய பிரச்சனை இருக்கிறது. அமெரிக்காவில் உள்ளூரில் டேட்டா சென்டர்களை அமைக்க முயன்றால் மக்கள் துரத்தியடிக்கிறார்கள். ஏனெனில் டேட்டா சென்டர்களுக்கு தண்ணீர் அதிக அளவில் தேவை. டேட்டா சென்டர்களை குளிர்விக்க ஒரு நாளைக்கு குறைந்தது 10-20 லட்சம் தூய நீர் தேவை. அமெரிக்காவின் அரிசோனா, டெக்ஸாஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே நிலத்தடி நீர் குறைந்திருக்கிறது. இப்படி இருக்கும்போது டேட்டா சென்டர் அமைத்தால் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்?

அதேபோல டேட்டா சென்டருக்கு ஏகப்பட்ட மின்சாரம் தேவை. இதற்காக மின்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மின்கம்பங்களை மாற்ற வேண்டும். இதையெல்லாம் செய்ய.. மின்கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யப்படும். இதுபோக.. டேட்டா சென்டர்களிலிருந்து வெளிவரும் அதிகப்படியான சத்தம், வெப்பம் ஆகியவற்றை மக்கள் எதிர்க்கிறார்கள். எனவேதான் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளை நாடுகின்றன.

இந்த பிரச்சனைகளையெல்லாம் சமாளிக்க இந்தியா ரெடியாக இருந்தாலும்.. டிரம்ப் குறுக்கே நின்று டேட்டா சென்டர்கள் நாட்டை விட்டு போக கூடாது என்று கூறுவது விவாதமாக வெடித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+