ஒரே மேடையில் விஜய், ஸ்டாலின், ரஜினி? அனிருத் ரிசப்ஷனில் நடக்க போகும் சந்திப்பு! ரசிகர்கள் வெயிட்டிங்
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் ரிசப்ஷன் இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. அதில் இசை, சினிமா, பிரபலங்கள், விருந்து என பல விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இன்றைக்கு ரசிகர்களின் கவனம் முழுவதும் வேறொரு விஷயத்தின் மீதுதான் இருக்கிறது. ஒரே இடத்தில் முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் சந்தித்துக் கொள்வார்களா? அப்படி ஒரு சந்திப்பு நடந்தால் எப்படி இருக்கும்? இதுதான் இப்போ சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்.

அனிருத் ரிசப்ஷன்
அதாவது, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன்குழும தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா கல்யாணம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட மாதிரி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கூட முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொண்ணு வீட்டு சார்பாகவும், நடிகர் ரஜினிகாந்த் மாப்பிள்ளை வீட்டு சார்பாகவும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. ஆனால் இப்போ அதைவிட வைரலாகும் ஒரு போட்டோவிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
விஜய், ஸ்டாலின் சந்திப்பு
ஏற்கனவே நடிகர் விஜய் முதல்வரானதும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்திருந்தார், அதுவே பெரிதாக பேசப்பட்டது. பிரச்சாரத்தின் போது அவ்வளவு விமர்சித்து பேசிவிட்டு கடைசியில் நேரில் எப்படி சந்தித்துக் கொண்டார்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் நடிகராக இருக்கும்போது எனக்கு ஃபேவரைட் ஹீரோவே சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அவரை பார்த்து தான் நான் சினிமாவுக்கு வந்தேன் என்று சொல்லிய விஜய் முதல்வர் ஆன பிறகு ரஜினியை மட்டும் சந்திக்கவே இல்லை. இதுவே ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ஆனால் சமீப காலமாக இந்த பேச்சு கொஞ்சம் ஓய்ந்திருக்கும் சமயத்தில், இப்போ அனிருத் ரிசப்ஷனில் இந்த 3 துருவங்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும்? எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அந்த வீடியோ, போட்டோவை பார்க்க வேண்டும் என்று பலர் ஆர்வத்தோடு போஸ்ட் போட்டு வருகிறார்கள். ஏற்கனவே கிரீஸ் திருமண கொண்டாட்டத்திலேயே ரஜினிகாந்து மற்றும் முக ஸ்டாலின் கலந்து கொண்டதால் இப்போ ரிஷப்ஷனில் இவர்கள் கலந்து கொள்வார்களா? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
விஜய் ரசிகர்களின் பயம்
ஆனால் ஒருவேளை விஜய், ஸ்டாலின், ரஜினி என மூன்று பேரும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டால் அதுதான் இன்று இந்திய அளவில் ட்ரெண்டாகும் போட்டோவாக இருக்கும். இவங்க மூன்று பேரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை பலருக்கு ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில், முதல்வர் விஜய்யின் ரசிகர்களுக்கோ இன்னொரு பயமும் இருக்கிறது. வழக்கம்போல இந்த நிகழ்ச்சியிலும் விஜய்யின் தோழியான திரிஷா விஜய்யோடு வந்துவிடுவாரா? என்று குழப்பத்தோடு கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள். சரி, இன்று மாலை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.




Click it and Unblock the Notifications
