பெண் போலீஸுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை.. புதுச்சேரி எஸ்.பி சுப்பிரமணியன் டிஸ்மிஸ்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: பெண் காவலருக்கு பாலியல் தொந்​தரவு அளித்த விவகாரத்​தில், துணைநிலை ஆளுநரின் உத்​தரவுப்​படி புதுச்​சேரி எஸ்.பி சுப்​பிரமணி​யன் அதிரடியாக பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

புதுச்​சேரி காவல்துறை​யில் எஸ்.பி.யாக பணி​யாற்​றிய​வர் சுப்​பிரமணி​யன். இவர் 2024 ஆம் ஆண்​டில் காரைக்​காலில் எஸ்.பியாக பணி​யாற்​றியபோது, அங்கு மகளிா் காவல் நிலையத்தில் பணியாற்றிய திரு​மண​மான பெண் காவலர் ஒரு​வருக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக புகார் எழுந்​தது.
பின்​னர் சுப்பிரமணியன் புதுச்​சேரிக்கு பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்டு சென்ற போதிலும், தொடர்ந்து பெண் காவலருக்கு தொல்லை கொடுத்து வந்​த​தாக கூறப்​படு​கிறது.

Puducherry SP Subramanian

அந்தப் பெண் காவலருக்கு தொடா்ந்து செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகள், வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை பெண் காவலரின் கணவா் கண்டுபிடித்ததால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு பெண் காவலர் கடந்த ஜனவரி மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதைத்தொடர்ந்து, பெண் காவலரின் தாயார் புகார் அளித்​தும் உரிய நட​வடிக்கை எடுக்​காததால், அவர் சென்னை உயர்நீதிமன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். எஸ்.பி சுப்பிரமணியன் மீது நட​வடிக்கை எடுக்​காதது குறித்து அடுத்​தடுத்த விசா​ரணைகளில் நீதி​மன்​றம் தொடர்ச்​சி​யாக கேள்வி எழுப்​பியது. விசாகா குழு அறிக்​கையை தாக்​கல் செய்​யுமாறு கேட்​டது.

கடந்த செப்.24 ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், குற்றவாளியைப் பாதுகாக்க முயற்சியா? என்றும் சரமாரியாகக் கேள்வி எழுப்பினாா். நடவடிக்கை எடுக்கத் தவறினால், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்திருந்தாா்.

அதைத்தொடர்ந்து, புதுச்​சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்​தர​வின்​படி, கடந்த செப்.24 ஆம் தேதி எஸ்பி சுப்​பிரமணி​யன் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். அதன் பின்​னரும் அவர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யாதது குறித்து நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பியது.

இதையடுத்து அவர் மீது பாலியல் துன்​புறுத்​தல், பாலியல் சார்ந்த தவறான செய்​கைகள் மூலம் பெண்​களை அவ​மதித்​தல், கொலை மிரட்​டல் விடுத்​தல் உள்​ளிட்ட 7 பிரிவு​களின் கீழ் காரைக்​கால் நகர காவல் நிலை​யத்​தில் செப்.28 ஆம் தேதி வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கில் நிபந்​தனை முன்​ஜாமீன் பெற்ற சுப்​பிரமணி​யன், நீதி​மன்ற உத்​தரவுப்​படி காரைக்​கால் நகர காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட்டு வந்​தார்.

இந்​நிலை​யில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்​தர​வின் ​பேரில் எஸ்பி சுப்​பிரமணி​யனை பணி நீக்​கம் செய்து தலை​மைச்​ செயலர் சரத் சவு​கான் நேற்று உத்​தர​விடப்​பட்​டுள்​ளார். சுப்​பிரமணி​யனின் பணிக்​காலம் பிப்​ரவரி மாதத்​துடன் நிறைவடைய உள்ள நிலை​யில் அவர் பணிநீக்​கம் செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+