துபாயில் இருக்கீங்களா? கோல்ட் வாங்க சரியான சான்ஸ்! அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் தங்கம் விலை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக குறைந்திருக்கிறது. இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 19 திர்ஹம் குறைந்திருக்கிறது. எனவே துபாயில் இருப்பவர்களுக்கு தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமாகும்.

வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலைக்குள் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியால், தங்கத்தின் விலை இந்த ஆண்டு முதல் முறையாக 450 திர்ஹம்முக்கு கீழ் சென்றுள்ளது.

Gold Price in Dubai

இன்று காலை நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை Dh 425.25 ஆக விற்பனை ஆகிறது. அதேபோல..

22 காரட் தங்கம் Dh 393.75க்கும்
18 காரட் தங்கம் Dh 323.75க்கும்
14 காரட் தங்கம் Dh 252.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,563 அமெரிக்க டாலருக்கும் கீழ் சரிந்ததன் காரணமாக தற்போது தங்கம் விலை சர்வதேச அளவில் குறைந்து இருக்கிறது.

பொதுவாக போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களில் தங்கம் விலை உயரும். ஆனால், தற்போது அதற்கு நேர்மாறாக விலை சரிந்திருக்கிறது. இதற்கு 3 முக்கிய காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

1. முதல் காரணம் அமெரிக்காவில் பணம் வீக்கத்தை கட்டுப்படுத்த.. மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டி இருக்கும் என அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரிகள் எச்சரித்ததுதான். இப்படி நடந்தால்.. வங்கி மற்றும் அரசு பத்திரங்களின் வட்டி விகிதங்கள் உயரும். தங்கம் தரும் லாபத்தை விட, இந்த பத்திரங்கள் தரும் லாபம் தான் அதிகம் என்பதால்.. முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு இந்த பத்திரங்களை நோக்கி ஓடுவார்கள். எனவே தங்கத்தின் மதிப்பும் மேலும் குறையும்.

2 அதேபோல சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பங்குகளில் ஏற்பட்டுள்ள கடும் விற்பனை மற்றும் இழப்புகளை ஈடுகட்ட.. முதலீட்டாளர்கள் தங்கத்தை விட்டு பணமாக்கி வருகின்றனர். தங்கம் அதிக அளவில் வெளியே வருவதால் அதன் மதிப்பு குறைய தொடங்கியிருக்கிறது.

3. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்க ஈரான் மோதல், கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி அதன் மூலமாக பணம் வீக்கத்தையும் அதிகரித்தது. அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க முடியாமல் போக இதுவும் முக்கியமான காரணம். இப்படி எல்லா பக்கத்திலிருந்தும் விலை குறைய காரணங்கள் ஏற்பட்டிருப்பதால் தற்போது விலை குறைந்திருக்கிறது.

விலை சரிந்ததால் துபாய் தங்க சந்தைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. விலை இன்னும் குறையுமா? அல்லது மீண்டும் உயருமா? என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்காக.. துபாயில் உள்ள முன்னணி நகைக்கடைகள், தற்போதைய குறைந்த விலையை முன் பதிவு செய்து கொள்ளும் திட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்திய சந்தையை விட துபாயில் 10 கிராம் தங்கத்திற்கு சுமார் ரூ.13,000 முதல் ரூ.16,000 வரை விலை குறைவாக இருப்பதால் சொந்த நாடு திரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இது சாதகமான அம்சமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+