UPSC தேர்வில் சக்ஸஸ்ஸா? இந்தாங்க தமிழக அரசின் ரூ. 50 ஆயிரம் பரிசு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய முதன்மைத் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, யு.பி.எஸ்.சி ஆளுமைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ 50 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதை பெற இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் நாடு அரசின் யு.பி.எஸ்.சி ஆளுமைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2026

upsc

தமிழ்நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம்: (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், (https://skilldevelopment.tn.gov.in/) ஆன்லைன் மூலம் 21.11.2026 முதல் 30.11.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் மேற்கண்ட வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராவோரை ஊக்குவிக்க தொடங்கப்பட்டுள்ளது.

25 ஆயிரம் யாருக்கு?

இந்த திட்டத்தின் கீழ் முதல்நிலை தேர்வில் (Prelims) தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த மே மாதம் 24 ஆம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த 651 பேர் மெயின்ஸ் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. முதல் நிலையில் தேர்ச்சி பெற்ற 651 பேரில் 642 பேர் தேர்வு எழுதினர். 9 பேர் வரவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 168 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

யுபிஎஸ்சி தேர்வு என்றால் என்ன?

யுபிஎஸ்சி தேர்வு குறித்து தகவல்களை பார்க்கலாம்.

மத்திய அரசு தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்திய அரசு குடிமைப் பணிகள் தேர்வு மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் (வெளியுறவு), ஐஎஃப்எஸ் (வனம்), ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்வித் தொகுதி

ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21 முதல் 32 வயது வரை(6 வாய்ப்புகள்), பிற்படுத்தப்பட்டோருக்கு 21 முதல் 35 வயது வரையும் (9 வாய்ப்புகள்), எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 21 வயது 37 வயது வரையும் (எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்).

எத்தனை நிலைகள்?

இந்த தேர்வு 3 நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் முதன்மைத் தேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றால் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இந்த தேர்வுகளுக்கு பொது அறிவு, நாட்டு நடப்புகள், சமூக பார்வை, தலைமைப் பண்பு உள்ளிட்டவைகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+