ஏற்காடு மலை பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து! ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காடு குப்பனூர் மலைப் பாதையில் தடுப்புச் சுவரை தாண்டி 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீஸர், மீட்பு துறையினர் விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். படுகாயமடைந்த 4 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
