நெல்லையில் திருமணம் முடிந்த மறுநாளே மனைவிக்கு குழந்தை.. கொத்தனார் தலையில் விழுந்த இடி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலியைச் சேர்ந்த 25 வயது கொத்தனாருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. புதுப்பெண்ணுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய அவருக்கு, அடுத்த நாளே எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. மனைவிக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வீட்டில் கிடந்த ஒரு சிசுவால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்தது. அப்படி என்ன நடந்தது?

திருநெல்வேலி அருகே அரியகுளம் லைன் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் வெங்கடேஷ். 25 வயதாகும் இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் தாழையூத்து அருகே ஏரான்குடிபாலத்தைச் சேர்ந்த பால்துரையின் மகள் பிச்சம்மாளுக்கும் திருமணம் நடந்துள்ளது. சாந்திநகர் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் இந்த திருமணம் ஜரூராக நடந்துள்ளது.. தொடர்ந்து ரிசப்ஷனும் நடந்துள்ளது..

Tirunelveli Mason

உப்பிய மணப்பெண் வயிறு

திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதிகளை வெங்கடேஷின் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துசென்றனர்.. அப்போது பெண்ணின் வயிறு பெரிதாக இருப்பதை கவனித்து, அதை அவரிடமே கேட்டுள்ளனர்.. அதற்கு மணப்பெண், தன்னுடைய வயிற்றில் பிரச்சனை இருப்பதாகவும், அதற்காக மாத்திரை, சாப்பிட்டு வருவதாகவும், அதனால்தான் வயிறு உப்பியுள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, மணமக்கள் இருவரும் அங்கேயே தங்கியிருந்தனர். முதலிரவு முடிந்த நிலையில், மறுநாள் அதிகாலையில் பிச்சம்மாள் கழிவறைக்கு சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் கழித்து, பிச்சம்மாளுக்கு திடீரென கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன வெங்கடேஷும் அவரது அக்காளும் பிச்சம்மாளை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குறைபிரசவம் கொடுமை

இதனிடையே சந்தேகமடைந்த வெங்கடேஷ் குடும்பத்தினர் ,கழிவறை உள்ளே சென்று பார்த்தபோது, இறந்த நிலையில் பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த சிசுவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிசுவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு வெங்கடேஷ், அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.. உடனே தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார். திருமணத்திற்கு முன்பே பிச்சம்மாள் கர்ப்பமாக இருந்திருக்கிறார். அந்த விஷயத்தை என்னிடம் மறைத்து திருமணம் செய்து கொண்டார்.. இப்போது குறைபிரசவத்தில் குழந்தை பெற்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரையடுத்து, பிச்சம்மாள் மீது நம்பிக்கை மோசடி, கருச்சிதைவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது பிச்சம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்..

காதல் - 7 மாத கர்ப்பம்

ஆனால், திருமணத்திற்கு முன்பே பிச்சம்மாள் ஒரு நபரை காதலித்து வந்தாராம்.. இதனால் கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.. ஆனால், இந்த காதலை ஏற்காத பெற்றோர், மகளை வெங்கடேஷூக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாக தெரிகிறது.. 7 மாத கர்ப்பிணியான பிச்சம்மாளுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.. இந்த கருவை கலைக்க பிச்சம்மாள், கருத்தடை மாத்திரைகளையும் உட்கொண்டதாக தெரிகிறது.

எனினும் போலீசார் இந்த விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.. பிச்சம்மாள் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தாரா? சிசு எப்படி இறந்தது என்பதெல்லாம் போலீசாரின் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.. ஆனால், இந்த சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+