சீனாவுக்கு 9 லட்சம் சிப்களை ஏற்றுமதி செய்த டிரம்ப் நிர்வாகம்! என்விடியாவுக்கு மட்டும் அநீதியா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சீன உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த பெண்ணுடன், நெருக்கமாக இருந்ததாக என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் மீது குற்றச்சாட்டு கிளப்பப்பட்டு அவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். இப்படி இருக்கையில், அமெரிக்க அரசே சீனாவுக்கு 9 லட்சம் சிப்களை ஏற்றுமதி செய்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சீன உளவு அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பெண், ஜென்சன் மூலம் என்விடியா நிறுவனத்திலிருந்து சிப்களை வாங்கி அதை சீனாவுக்கு சப்ளை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. எனவேதான் ஜென்சனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஆனால், இன்னொரு பக்கம் இந்த விஷயங்கள் எல்லாம் வெளியில் தெரியாமல்.. ஆனால், அதிகாரப்பூர்வமாக நடந்திருக்கிறது.

US china donald trump

அமெரிக்க வர்த்தகத்துறை கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை 6 மாதங்களில் கிட்டத்தட்ட சுமார் 9 லட்சம் சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் பிரையன் மாஸ்ட், ஏற்றுமதி கட்டுப்பாட்டு சீர்திருத்த சட்டத்தின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி.. இந்த ரகசிய உரிமை ஆவணங்களை நேற்று பொதுவெளியில் வெளியிட்டு இருக்கிறார்.

என்விடியா மற்றும் ஏஎம்டி நிறுவனங்களின் சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்ய, மொத்தம் 34 லட்சம் விண்ணப்பங்கள் சீனாவிடமிருந்த வந்திருந்தன. ஆனால் 8,79,868 சிப்புகளுக்கு மட்டுமே அமெரிக்கா வர்த்தகத் துறையின் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பணியகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. என்விடியாவின் மேம்பட்ட H200 மற்றும் அதற்கு இணையான ஏஎம்டியின் MI325X சிப்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.

அதேபோல,அனுமதி பெற்ற நிறுவனங்களில் பல.. அமெரிக்க பாதுகாப்பு துறையால் சீன ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் என்று லிஸ்ட்டிடப்பட்டிருந்தன. இப்படி லிஸ்ட்டிடப்பட்டிருந்தாலும்.. அந்நிறுவனங்களுக்கு சிப்களை ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுத்திருப்பதுதான் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

இது மட்டுமல்லாது.. என்விடியாவின் உரிமை விண்ணப்பங்களில் குறிப்பிட்டு இருந்த maginfra, New Matrix ஆகிய நிறுவனங்கள், சிப்களை சீனாவுக்கு கள்ளத்தனமாக கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் போலி நிறுவனங்களாக இருக்கலாம் என்று நாடாளுமன்ற குழு சந்தேகம் கிளப்பி இருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, கடந்த ஜோ பைடன் ஆட்சியில் சீனாவுக்கு சீப் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 25 சதவீத வரிவிதிப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் விற்பனைக்கு அனுமதி கொடுத்திருந்தது. இப்படி கொடுக்கப்பட்ட அனுமதி மற்றும் விநியோகிக்கப்பட்ட சிப் உள்ளிட்ட விஷயங்கள்.. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரத்தை, டிரம்ப் நிர்வாகம் ஆபத்தில் அழுத்தியுள்ளதாக ஜனநாயக கட்சி உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு பக்கம் சீனவுடன் தொடர்பு என்று சொல்லிவிட்டு ஜென்சனை காலி செய்தார்கள். ஆனால், இன்னொரு பக்கம் அமெரிக்காவே அதிகாரப்பூர்வமாக சிப்களை ஏற்றுமதி செய்திருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+