விழுப்புரம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து 10 வயது சிறுவன் பலியான சோகம்! தாய், தந்தை படுகாயம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சிறுவனின் தாய், தந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது வீரசோழபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மூர்த்தி என்பவர் அவரது மனைவி சரண்யா இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மூர்த்தி ஊர் காவல்படையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மூர்த்தியின் மனைவி சரண்ய இன்று காலை வழக்கம்போல சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூர்த்தியின் மகன் பத்ரிநாத் (10) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் உறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த பத்ரிநாத் உடலைக் கைப்பற்றியதோடு, படுகாயம் அடைந்த மூர்த்தி மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியோரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளளனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப் படுத்தி வருகின்றனர். மூர்த்தியின் மனைவி பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவதால் வேறு யாரேனும் இந்த விபத்தில் சிக்கி இருக்கிறார்களா என்று மீட்பு பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
