டி. ராஜா போட்ட குண்டு.. பெண்கள் இட ஒதுக்கீடா.. தொகுதி மறுவரையறையா? மத்திய அரசின் திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வரலாம் அல்லது தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையை பெற முயலலாம்" என்று மத்திய அரசின் நாடாளுமன்ற சிறப்புக் கூட்ட அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா... நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டுவரப்படுமா? அந்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான 3ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெற மத்திய அரசு முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது..!!

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவம்பர் 30-ம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையும் கூடும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

D Raja

ஆனால், இந்த கூட்டத்தில் என்னென்ன மசோதாக்கள் கொண்டுவரப்படும் என்பதை மத்திய அரசு இன்னும் சொல்லவில்லை..இதனால் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளிடம் இப்போதே எழ ஆரம்பித்து விட்டது..

தொகுதி மறுவரையறை

கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கொண்டுவந்தது. இந்த மசோதா நிறைவேற, வாக்களிக்கும் உறுப்பினர்களில் 3ல் 2 பங்கு பேர் ஆதரவளிக்க வேண்டும்.

ஆனால், நடந்த வாக்கெடுப்பில் 298 பேர் மட்டுமே மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 230 பேர் எதிராக வாக்களித்தனர். மொத்தம் 528 பேர் வாக்களித்த நிலையில், 352 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. அந்த ஆதரவு கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை. இப்போது மறுபடியும் அதே மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறதா என்பதுதான் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்வி.

மெஜாரிட்டி கிடைக்கல

ஏப்ரலில் மசோதாவுக்கு தேவையான 3ல் 2 பங்கு மெஜாரிட்டிக்கு கிடைக்காத நிலையில், இப்போது நடைபெறவுள்ள சிறப்பு கூட்டத்தில் அந்த எண்ணிக்கையைப் பெற மத்திய அரசு முயற்சிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன..

இதற்காக கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தி, மாற்றுக் கட்சிகளின் எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்ட மத்திய அரசு முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த முயற்சியை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் "Super-tainted majority" என்று விமர்சித்துள்ளார்.

டி. ராஜா எழுப்பிய கேள்விகள்

இப்படிப்பட்ட சூழலில்தான், மூத்த தலைவர் டி. ராஜாவின் பேட்டி ஒன்று கவனம் பெற்றுள்ளது.. செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "இந்த சிறப்பு மழைக்கால கூட்டத் தொடர் அறிவிப்பு, நாடாளுமன்ற நெறிமுறைகளையும் மரபுகளையும் முற்றிலும் மீறும் செயல். பருவமழைக் கால அமர்வு இன்னும் முறையாக முடித்து வைக்கப்படவில்லை. அதனால் குளிர்கால அமர்வுதான் கூட்டப்பட வேண்டும்..

மேலும் கூட்டத்தொடர் நடைபெறும் தேதி அறிவிப்புக்கும், அமர்வுக்கும் இடையில் 14 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இந்த அறிவிப்பில் எந்தவொரு தெளிவான நிகழ்ச்சி நிரலும் குறிப்பிடப்படவில்லை. அனைத்தும் வெறும் ஊகங்களே... தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வரலாம் அல்லது தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையைப் பெற முயலலாம்.

தொகுதி மறுவரையறை

எந்தெந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் அல்லது நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை என்றார். இது குறித்துத் தெளிவான தகவல் கிடைத்ததும், எங்கள் கட்சி உரிய நிலைப்பாட்டை எடுக்கும்..

தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை, எங்கள் கட்சிக்கென்று ஒரு தெளிவான நிலைப்பாடு உள்ளது, அதை நாங்கள் ஏற்கனவே வெளிப்படையாகக் கூறிவிட்டோம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஏன் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கிறார்கள்? தொகுதி மறுவரையறை செய்ய வேண்டுமானால், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படியானால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அவர்கள் எப்போது நடைமுறைப்படுத்த போகிறார்கள்?" என்றெல்லாம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?

டி. ராஜா எழுப்பியுள்ள கேள்வி தமிழ்நாட்டுக்கும் முக்கியமானது. ஏனென்றால், தொகுதி மறுவரையறை மூலம் மாநிலங்களுக்குக் கிடைக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டால், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்கள் பாதிக்கப்படலாம் என்ற கவலை ஏற்கனவே எழுந்துள்ளது.

தொகுதி மறுவரையறையென்றால் மக்களவை தொகுதிகளின் எல்லைகளையும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையையும் மாற்றி அமைப்பதாகும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாக வைத்து தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களுக்குக் கிடைக்கும் இடங்களின் பங்கு குறையக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு

அதேபோல், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கவில்லை. ஆனால், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதையும் தொகுதி மறுவரையறையையும் ஏன் ஒன்றாக இணைக்க வேண்டும் என்பதுதான் அவற்றின் கேள்வி.

நவம்பர் 30ம் தேதி தொடங்கும் கூட்டத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது இன்னும் தெரியவில்லை. தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டால், அதை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்பதும் தெரியவரும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+