என்னுடைய இந்த நிலைமைக்கு.. செல்வமணி சொன்ன வார்த்தைகள் தான் காரணம்.. நெகிழ்ந்த நடிகை ரோஜா
சென்னை: சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினியாக வலம் வந்து, இன்றைக்கும் அரசியலில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை ரோஜா. சினிமாவில் நடிக்கும் போது இருந்த அதே தைரியமும், வெளிப்படையான பேசும் குணமும் இப்போதும் அவரிடம் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவள் விகடன் விருது மேடையில் ரோஜாவுக்கு "எவர்கிரீன் நாயகி" விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விருதை நடிகர்கள் நெப்போலியன் மற்றும் பிரசாந்த் வழங்கிய நிலையில் அங்கு ரோஜாவை பற்றி இருவரும் பகிர்ந்த பழைய நினைவுகளும் கவனம் பெற்று இருக்கின்றன.

நெப்போலியன் பேச்சு
விருது வழங்கிய நெப்போலியன் ரோஜா உடன் தனக்கு இருந்த பழைய பழக்கங்களை நினைவு பேசி இருந்தார். " திருமணத்திற்கு முன்பே செல்வமணி, ரோஜா இருவரும் தனக்கு அறிமுக மாணவர்கள் என்றும் ரோஜா எப்போதுமே தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டே இருப்பவர் என்றும் பாராட்டி இருந்தார். அது மட்டும் அல்லாமல் தனக்கு டான்ஸ் ஆட தெரியாத போதும் ரோஜாவுடன் ஜக்கு ஜக்கு வத்திக்குச்சி பாடலுக்கு டான்ஸ் ஆட வைத்து விட்டார்கள்" என்று சிரித்தபடி பழைய நினைவுகளை பகிர்ந்து இருந்தார்.
ரோஜாவை பாராட்டிய பிரசாந்த்
அதுபோல நடிகர் பிரசாந்த் பேசும்போது, ரோஜா முதலில் செம்பருத்தி படத்தில் நடித்த காலத்தை நினைவு கூர்ந்து பேசி இருந்தார். அப்போது பள்ளி சிறுமியை பார்த்தது போல இருந்த ரோஜாவை ஹீரோயினியாக அறிமுகப்படுத்தியது, சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் ஆர்கே செல்வமணி தங்களை விதவிதமான கோணங்களில் பார்த்து நடிக்க சொல்லி வேலை வாங்கியதை சொல்லி சிரித்திருக்கிறார்.

மேலும் ரோஜாவை சிங்கப்பெண் என்று பாராட்டிய பிரசாந்த் சினிமாவில் வெற்றி பெற்றது, மட்டுமின்றி காதல், குடும்பம், குழந்தைகளின் படிப்பு என அனைத்தையும் சிறப்பாக கவனித்து இப்போது அரசியலிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி இருப்பதாக கூறினார்.
ரோஜா பேச்சு
விருது பெற்ற ரோஜா பேசும் போது, "பலரும் என்னிடம் அமைதியாக இருப்பவர் எப்படி இவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்று கேட்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் பின்னால் என்னுடைய கணவர் செல்வமணி சொன்ன ஒரு வார்த்தை தான் இருக்கிறது. செல்வா, என்னிடம் நீ எதில் இறங்கினாலும் பெஸ்ட்டா இறங்கணும் என்பார், அது எனக்கு மனதில் நின்று விட்டது. அரசியலுக்கு வரும்போது நான் ஜீரோ தான். ஆனால் நான் ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டுமானால் அதற்கு நேரம் ஒதுக்கி முழுமையாக அறிந்து பேசுவேன்" என்று
நெகழ்ச்சி உடன் பேசி இருக்கிறார்.
இந்த வார்த்தைகள் ரோஜாவின் அரசியல் பயணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. சினிமாவில் நடிப்பது வேறு, அரசியல் மக்களிடம் பேசுவது வேறு. ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் பேசக்கூடாது என்ற அனுகுமுறையைத்தான் கடைபிடிப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் அரசியலுக்குள் நுழைந்தபோது தனக்கு எல்லாமே புதிதாக இருந்தாலும் தொடர்ந்து கற்றுக் கொண்டு தன்னை தயார்படுத்திக் கொண்டு வருவதாக அவரது பேச்சில் தெரிகிறது.
ரோஜாவின் சினிமா பயணம்
90ஸ்களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரோஜா மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான அவர் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சூரியன், வீரா என அந்த நேரத்தில் அவர் நடித்த பல படங்கள் தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. டான்ஸ், அழகு, துருதுருப்பான நடிப்பு என அந்த காலகட்டத்தில் தனி முத்திரை பதித்திருந்தார்.
திருமண வாழ்க்கை
பின்னர் பல வருடங்களாக காதலித்து ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்ட ரோஜா, குடும்ப வாழ்க்கையையும், சினிமா வாழ்க்கையும் தொடர்ந்து கவனித்து வருகிறார். அதன் பிறகு அரசியலில் நுழைந்து தேர்தல், கட்சி பணிகள், மக்கள் தொடர்பு என வேறு ஒரு பாதையில் பயணிக்க ஆரம்பித்தார். சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை அரசியலில் விமர்சனங்களையும் எதிர்கொண்டாலும் தொடர்ந்து பொதுவெளியில் தன்னுடைய கருத்துகளையும் தைரியமாகவே பேசி வருகிறார்.
இப்படி சினிமா, அரசியல், குடும்பம் என பல கட்டங்களை கடந்து வந்த ரோஜாவுக்கு இப்போது கிடைத்திருக்கும் எவர்கிரீன் நாயகி விருது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். அதிலும் பிரசாந்த், நெப்போலியன் போன்ற சக நடிகர்கள் மேடையில் அவரைப் பற்றி சில பழைய நினைவுகளை பகிர்ந்து பாராட்டியது ரோஜாவின் சினிமா பயணத்தை மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறது.




Click it and Unblock the Notifications
