நெல்லையப்பர் கோவிலில் குடும்பத்துடன் நடிகை ரோஜா.. தமிழக அரசியல் நிலை பற்றி கொடுத்த ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ரோஜா, இன்று தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகனுடன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பல வருடங்களாக இந்த கோவிலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டதாகக் கூறிய அவர், கோவிலின் பிரம்மாண்டத்தையும் சிற்ப வேலைப்பாடுகளையும் பார்த்து வியந்ததாக செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். ஆனால், தமிழக அரசியல் நிலவரம் குறித்த கேள்வி வந்தபோது மட்டும், எதிர்பாராத ரியாக்ஷன் கொடுத்து விட்டு கிளம்பி விட்டார்.

திருநெல்வேலியில் நடிகை ரோஜா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. நடிப்பை தாண்டி அரசியலிலும் முக்கிய பிரபலமாக இருக்கும் அவர், ஆந்திராவில் அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். இந்நிலையில், குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு வந்த அவர் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். கோவிலில் தரிசனம் முடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, பல வருடங்களாகவே திருநெல்வேலிக்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தேன், இப்போது எங்களுடைய உதவியாளர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருநெல்வேலிக்கு வந்தேன், அந்த வாய்ப்பை பயன்படுத்தி நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினார்.

Roja visits Nellaiyappar Temple

நெல்லையப்பர் கோவில் சிறப்பு

கோவிலுக்குள் சென்றபோது அங்கிருந்த மண்டபங்களின் பிரம்மாண்டம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், கல் தூண்களில் இருக்கும் சிறப்புகளையும் இசை எழுப்பும் தூண்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, கோவிலின் சிறப்புகள் குறித்து அங்கிருந்தவர்கள் எடுத்துச் சொன்னபோது அவற்றைக் கேட்பதற்கே பிரமிப்பாக இருந்ததாக பேசிக் கொண்டிருந்தார். மேலும், சிவபெருமானின் சிலை தொடர்பான வரலாற்றையும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்கும்போது அந்த சம்பவம் கண் முன்னால் நடப்பது போலவே உணர்ந்ததாகவும், மனநிறைவுடன் சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினார்.

அரசியல் கேள்விக்கு பதில்

கோவில் தரிசனம் குறித்து பேசிக்கொண்டிருந்த ரோஜாவிடம் செய்தியாளர்கள் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கேள்வி எழுப்பினர். உங்களது சினிமா துறையில் இருந்து வந்திருக்கும் விஜய் ஆட்சி எப்படி இருக்கிறது? சமீபகாலமாக அதிகமாக குழந்தைகள் காணாமல் போகிறது, அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதும், அதற்கு அவர் நீண்ட விளக்கம் எதுவும் கொடுக்காமல், 'நோ பாலிடிக்ஸ்' என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருக்கும் நேரத்தில் அரசியல் விவாதத்தைத் தவிர்க்கவே அவர் விரும்பியதாக இந்த பதில் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+