ஏதாவது இருந்தா என்கிட்ட சொல்லுங்க.. ஏன் பொதுவில் பேசுறீங்க? தனியாக அழைத்து பேசிய விஜய்! பின்னணி
சென்னை: கண்ணாடிக் கதவுகளில் மோதி காயமடைந்த அமைச்சர் புஸ்சி ஆனந்த் பற்றித்தான் தவெக அமைச்சர்களிடமும் தவெகவின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் ஒரே பரபரப்பான பேச்சாக இருக்கிறது. இது மெல்ல மெல்ல கசிந்து, தவெக கட்சி முழுக்கப் பரவி வருகிறது.
சென்னையில் முதலமைச்சர் விஜய்க்காக சமீபத்தில் உருவாக்கப்பட்ட அரசு பங்களாவான பாமினி இல்லத்தில் தான் தற்போதெல்லாம் ஓய்வு எடுக் கிறார் விஜய். இந்த இல்லத்தில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பால் காய்ச்சிக் குடியேறிருந்தார். இந்த பங்களாவில் முதல் நிகழ்ச்சியாக, தவெக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை அழைத்து விருந்து வைத்தார் விஜய். வெறும் விருந்து நிகழ்வுகளுடன் முடியாமல், கூட்டணிக் கட்சிகளுடான ஆலோசனைக் கூட்டமாக மாறியிருந்தது அந்த சந்திப்பு. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சிவாரியாக கலந்துரை யாடிய விஜய்
கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் ஒவ்வொரு கட்சிவாரியாக கலந்துரை யாடிய விஜய், தற்போது தங்களுக்கு எதிராக விளையாடும் அரசியல் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான விஸ்வநாதன், ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் துடிப்பது நம்பிக்கையில்லா தீர்மான ம் தான். தவெக எம்.எல்.ஏ.க்களிடம் குழப்பத்தை உருவாக்க திமுக செய்கிற சதி இது. மற்றபடி, இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவர மாட்டார்கள் என்று கூறினார்.
அமைச்சரும் விசிக எம்.எல்.ஏ.வுமான வன்னி அரசு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத்தான் திமுக எப்போதும் நினைக்கும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றிபெற வைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பலம் கிடையாது. அதனால், அவர்கள் கொண்டு வர மாட்டார் கள். தவெக ஆட்சி பலகீனமாக இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க ஸ்டாலினும் எடப்பாடியும் போட்டுள்ள திட்டம் இது. அது, பலிக்காது என்று பேசியிருக்கிறார்.
இதே ரீதியில்தான் மற்றவர்களும் பேசியுள்ளனர். இதனையடுத்து அவர் களிடம் பேசிய விஜய், உங்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்குத் தேவை. திமுகவிடமிருந்து ஒரு மாற்றம் வேண்டும்னு மக்களிடம் சொல்லி வாக்கு வாங்கி ஜெயித்திருக்கிறோம். ஆனால், இந்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள் எதிரிகள். இதற்காக, ஜென்ம எதிரிகளான திமுகவும் அதிமுக வும் கைக்கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிஜமான மக்களாட்சியை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதை கவிழ்க்க நினைக்கும் எதிரிகளுக்கு நீங்க துணை போய்டக் கூடாது. உங்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்குத் தேவை என்று சொல்லியிருக்கிறார்.
இடைத்தேர்தல் குறித்த விவாதம்
இதனையடுத்து இடைத்தேர்தல் குறித்த விவாதமும் அங்கு வந்திருக்கிறது. அப்போது, காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு எதிராக உள்ள தேர்தல் வழக்கின் தீர்ப்பு, இந்த மாதம் (நவம்பர்) இறுதியில் வரும் என எதிர் பார்க்கிறோம். எப்படி பார்த்தாலும், இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதியளிக்கும் ; தடை கொடுக்காது என்றுதான் தலைமை வழக்கறிஞர் கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். அதனால் தீர்ப்பு வந்தப் பிறகு, அடுத்த மாதமே கூட இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். இடைத்தேர்தலில் வெற்றி பெற உங்களின் ஆதரவு தவெகவுக்கு முக்கியம். இடைத்தேர்தல் வெற்றியோடு ஜனவரியில் சட்டமன்றத்தைக் கூட்டலாம் என நினைக்கிறேன் என்று சொல்லியுள்ளார் விஜய்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய விஜய், உங்களின் கொள்கைகள் தான் என்னுடைய கொள்கையும். எந்த இடத்தில் உங்களோடு முரண்படுகிறேன்? காண்ட்ராவெர்சி இருந்தால் என்னிடம் சொல்லலாம். பொது வெளியில் விமர்சிக்க வேண்டுமா? உங்களின் ஆலோசனையில் தான் சிறப்பான நிர்வாகத்தைத் தர உழைக்கிறேன் என டச்சிங்காக பேசியுள்ளார்.
இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், தங்களின் தொகுதி பிரச்சனைகளை மட்டும் விவரித்து விட்டு, இது போன்று மாதத்திற்கு ஒருமுறையாவது எங்களை அழைத்துப் பேசுங்கள். அப்போதுதான் எங்க தொகுதிகளின் நிலவரம் உங்களுக்குத் தெரியும். நாங்களும் உங்களிடம் விவாதித்தோம் என்ற திருப்தி கிடைக்கும். சந்திக்க முடியாத, எட்டாத தூரத்தில் நீங்கள் இருக்காதீர்கள் என்று சொல்லி விட்டு வந்துள்ளனர்.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
