திண்டுக்கல் நிலக்கோட்டையில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வயதான தம்பதியினர் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் கோபால் (71) ஜவுளி வியாபாரியான இவரது மனைவி விஜயலட்சுமி (65) ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர்,இவர்களது இரண்டு மகன் ஒரு மகள் தனியாக வசித்து வருகின்றனர்.

Dindigul Elderly couple discovered dead inside a locked house in Nilakottai

இந்நிலையில், கணவன் மனைவி இருவரும் இன்று காலை நெடு நேரமாகியும் கதவு திறக்காமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை காவல் துறையினர், உயிரிழந்த கோபால், விஜயலட்சுமி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த நிலக்கோட்டை காவல் துறையினர், கணவன் மனைவி உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலக்கோட்டையில் கணவன், மனைவி பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவண்ணாமலையில் பூட்டிய கழிவறையில் காவலர் சடலம் மீட்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் திருவிழா நடைபெற்று வந்தது. இந் நிலையில் மகா ரத தேரோட்டம் மற்றும் மகா தீப திருவிழா பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 15,500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை தீபதிருவிழா பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த காவலர்கள் மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கி இருந்தனர். இந்நிலையில் தீபத் திருவிழா முடிந்த நிலையில் முதல் தங்களது சொந்த மாவட்டத்திற்கு காவலர்கள் சென்றனர். அதில் ஒரு காவலர் மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆண்கள் கழிவறையில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இன்று காலையில் பள்ளி வழக்கம் போல் நடைபெற்ற நிலையில் கழிவறைக்கு சென்ற பணியாளர்கள் பூட்டியிருந்த கழிவறை திறக்க முடியாமல் இருந்ததை கண்டனர். அதனை உடைத்து திறந்து பார்த்த போது அங்கு காவலர் ஒருவர் இறந்த நிலையில் இருந்து அதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு தலைமை ஆசிரியர் மங்கலம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த மங்கலம் காவல் துறையினர் இறந்த உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் முதற்கட்ட விசாரணையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வடிவழகன் (வயது38). இவர் சென்னை ஆவடி சிறப்பு காவலர் 13ம் அணியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் பணிக்காக வந்த காவலர் கழிவறையில் இறந்து கிடந்த சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+