அனுபவம் இல்லை, வீக்கான வாதம்! திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு படுதோல்வி அடைந்தது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாத விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு தமிழக வெற்றிக் கழக லைமையிலான தமிழக அரசுக்கு மிகப்பெரிய சட்ட மற்றும் அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கோவில் அறங்காவலர் குழுவை நீக்கம் செய்து, ஓய்வுபெற்ற இரண்டு நீதிபதிகளை நிர்வாகிகளாக நியமித்ததோடு, திருப்பரங்குன்றம் மலையை சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவும், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட 8 பேருக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு இவ்வளவு மோசமான தோல்வியையும், நீதிபதிகளின் கடுமையான கண்டனத்தையும் எதிர்கொண்டதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்களை எளிய முறையில் பார்க்கலாம்

Why TN Govt Lost the Thiruparankundram Deepam Case in Supreme Court

திமுக போல் கொள்கை ரீதியான உறுதியான நிலைப்பாடு இல்லாதது

கடந்த ஆண்டு திமுக ஆட்சியின்போதும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. ஆனால், அப்போது திமுக அரசு தனது நிலைப்பாட்டில் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் நின்றது. பாரம்பரிய வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில்தான் தீபம் ஏற்றுவோம்; தீபத்தூணில் ஏற்ற முடியாது என்பதை நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் திமுக அரசு வெளிப்படையாகக் கூறியது. அதற்கான விளைவுகளையும் நேரடியாகச் சந்தித்தது. அது அரசின் நிலைப்பாடாக இருந்தது - ஆட்சியரின் நிலைப்பாடாக.. அறங்காவலர் குழுவின் நிலைப்பாடாக இல்லை!

ஆனால், தவெக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கவில்லை. நவம்பர் 24-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவோம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பேசினர். ஆனால், களத்தில் தீபம் ஏற்றாமல் தவிர்த்து, நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் செயல்பட்டதே நீதிபதிகளின் கடும் கோபத்திற்கு முதல் காரணமாக அமைந்தது.

பொறுப்பேற்காமல் 'பழி போடும் ஆட்டம்'

தீபம் ஏற்றாததற்கான பொறுப்பை அரசுத் தரப்பு நேர்மையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, ஒவ்வொரு துறையும் மற்றொரு துறை மீது பழியைத் தூக்கிப் போடும் நாடகத்தை அரங்கேற்றியது:

மாவட்ட ஆட்சியர்: "நான் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன்; கோவில் தேவஸ்தானத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்; என்னால் நேரடியாகச் சென்று தீபம் ஏற்ற முடியாது" எனக் கைவிரித்தார்.

காவல்துறை: "நாங்கள் 3,600-க்கும் மேற்பட்ட போலீசாரைக் குவித்துச் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்தோம்" எனத் தங்களது கடமை முடிந்துவிட்டதாகக் கூறியது.

கோவில் நிர்வாகம்: கோவில் செயல் அலுவலரோ, "மதச் சடங்குகளில் என்னால் தலையிட முடியாது; அறங்காவலர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

அறங்காவலர்கள்: கடைசி நேரத்தில் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள், கோவில் அர்ச்சகர்கள் (ஸ்தானிகர்கள்) கூறியதால்தான் தீபம் ஏற்றவில்லை எனக் கூறினர். ஆனால், தங்களிடம் எதுவுமே கேட்கப்படவில்லை என ஸ்தானிகர்கள் பகிரங்கமாக மறுத்ததால், அரசின் மொத்தத் திட்டமும் அம்பலமானது.

பலவீனமான வாதங்களும், ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியும்

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களால் நீதிபதிகளின் கேள்விகளுக்கு வலுவான பதில்களை அளிக்க முடியவில்லை.

நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், நான்கு நாட்களாக அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதற்குச் சரியான விளக்கம் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு இருந்தபோதும், கோவில் அறங்காவலர் குழுவின் தீர்மானத்திற்கு அவர் காத்திருந்தது ஏன் என்ற நீதிபதிகளின் கேள்விக்குப் பதில் இல்லை.

ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஒருங்கிணைந்து செயல்படாமல், உச்ச நீதிமன்ற உத்தரவை எப்படித் தட்டிக்கழிக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்தியது ஆவணங்கள் மூலம் அம்பலமானது.

வீக்கான வாதம்

அரசின் வீக்கான வாதத்திற்கு முக்கிய உதாரணம் என்றால்..

நீதிபதிகள்: அறங்காவலர் குழு எந்த அடிப்படையில் கூடினார்கள்?

கோயில் நிர்வாக அதிகாரி: அவர்களாகவே கூடினார்கள்

நீதிபதிகள்: இல்லை, அவர்களாக கூட முடியாது. முறைப்படி ஒரு அதிகாரி அழைப்பு விடுத்து, அறங்காவலர்கள் கூடி முடிவெடுக்க முடியும் என்றுதான் உங்கள் சட்டம் சொல்கிறது

கோயில் நிர்வாக அதிகாரி: அறங்காவலர் குழு, மத ரீதியில் எடுக்கும் முடிவுகளில் நிர்வாக அதிகாரி தலையிட முடியாது என்று சொதப்பலான வாதம் வைத்து.

இதனால்தான், "நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா இல்லை முதலைக் கண்ணீரா?" என்றும், "நீங்கள் செய்திருப்பது அரசியலமைப்புச் சீர்குலைவு" என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாகச் சாடினர். தெளிவான நிலைப்பாடு இல்லாததும், அதிகாரிகள் ஒருவரையொருவர் கைகாட்டித் தப்பிக்க முயன்றதுமே இந்த வழக்கில் தமிழக அரசுக்குப் பெரும் தோல்வியைப் பெற்றுத் தந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+