திருப்பரங்குன்றத்தில் மத்திய பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலையில், இந்துத்துவா அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டிருக்கிறது. மட்டுமல்லாது திருப்பரங்குன்றத்தில் மத்திய பாதுகாப்பு படையினரை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில் திருப்பதியில்லை என்று கூறி, அறிக்கையை நீதிபதிகள் நிராகரித்திருந்தனர். இதையடுத்து தற்போது மத்திய பாதுகாப்பு படையினர் கன்ட்ரோலில் திருப்பரங்குன்றம் மலை வர உள்ளது.

Thiruparankundram Deepam Case

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீப சுடரைக் கொண்டோ அல்லது வேறு முறையான ஏற்பாடுகள் மூலமாகவோ.. நாளை திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தர்காவிலிருந்து குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவில் நின்று அனைத்து பக்தர்களும் தீபம் ஏற்ற, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு நவம்பர் 20 அன்று விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், உள்ளூர் போலீசார் பாதுகாப்பிலிருந்து கோயில் நீக்கப்பட்டு, முழுக்க CRPF பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட இருக்கிறது என்பதுதான். உள்ளூர் காவல்துறை, தனது கடமையை செய்ய தவறி விட்டதால்.. கோயில் மற்றும் மலைப்பகுதியின் பாதுகாப்பை சென்னை CRPF கமாண்டன்ட் உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும் தர்காவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க CRPF தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும், சமூகப் பொறுப்புகளை சிஆர்பிஎப்பிடம் சுமூகமாக ஒப்படைப்பதை தமிழ்நாடு டிஜிபி, ஐஜிபி மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் மற்றும் நேரில் ஆஜராக உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் தலைவர்களின் கட்டளைப்படி செயல்பட்டுள்ளனர் என்று நீதிமன்றம் அவர்களை விமர்சித்திருக்கிறது. "அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு உள்ளனர் என தெரிகிறது. மாவட்ட ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை முதலை கண்ணீர் வடிப்பது போல உள்ளது" என நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+