தமிழ்நாடு தலைமை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்! தீபம் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில், உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு தலைமை செயலாளர் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதில் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இடையேயான தொலைப்பேசி அழைப்பு விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போது நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி அமர்வு உத்தரவை கொடுத்திருக்கிறது. உத்தரவில் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

Thiruparankundram

1. தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டிஜிபி)
2. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்
3. மாவட்ட ஆட்சியர் - மதுரை
4. காவல் ஆணையர் - மதுரை
5. காவல் துணை ஆணையர் - மதுரை
6. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
7. கோவில் துணை ஆணையர் / செயல் அலுவலர்
8. கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள்

ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றங்களை பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு, அரசு நிர்வாகத்தில் அரசியல் அழுத்தம் காரணமாகவே அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளார்களா? என்ற பின்னணியை ஆதாரப்பூர்வமாக கண்டறிய பிறப்பிக்கப்பட்ட மிக அரிதான மற்றும் கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர் தனக்குள்ள பரந்த அதிகாரத்தை பயன்படுத்தி தீபம் ஏற்ற ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால், கடைசி நேரத்தில் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் தீர்மானத்தை காரணம் காட்டி அவர் ஒதுங்கிக் கொண்டதை நீதிபதிகள் ஏற்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் துணிச்சல் அதிகாரிகளுக்கு தானாக வந்திருக்காது! அரசியல் தலைவர்களின் கட்டளையின்படி அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர், என நீதிபதிகள் வெளிப்படையாக தங்கள் உத்தரவில் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு பின்னால் யார்? யார்? இருந்தார்கள் என்பதை கண்டறிய கீழ்கண்ட மின்னணு மற்றும் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை தமிழ்நாடு தலைமைச் செயலாளர், தனது பிரமாண தனிப்பட்ட பிரமாணம் பத்திரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1. நவம்பர் 20 முதல் நவம்பர் 24 வரையிலான காலகட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் யார் யாருடன் எத்தனை முறை தொலைபேசியில் பேசினார்கள்? என்ற விவரம்

2. இந்த விவகாரம் தொடர்பாக.. அதிகாரிகளுக்கு இடையே அல்லது அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களிடம் இருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள்.

3. துறை ரீதியாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள், சுற்றறிக்கைகள் மற்றும் கூட்ட குறிப்புகள்.

ஆகியவற்றை பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த தகவல் பரிமாற்றங்களை ஆய்வு செய்யும்போது.. தீபம் ஏற்றக்கூடாது என்ற முடிவு அதிகாரிகளால் எடுக்கப்பட்டதா? அல்லது மேல் இடத்தில் இருந்து வாய்மொழியாகவோ, செய்தியாகவோ உத்தரவு வந்ததா? என்பது தெளிவாகிவிடும்.

தலைமை செயலாளர் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் ஏதேனும் தகவல்கள் மறைக்கப்பட்டாலோ.. அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டாலோ.. அது நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்த குற்றமாக கருதப்பட்டு, தலைமை செயலாளர் மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை குறிப்பிட்ட அமைச்சர்கள் அல்லது அரசியல் தலைவர்களின் தலையீடு இருப்பது அழைப்பு விவரங்கள் அல்லது செய்திகள் மூலம் உறுதியானால்.. அந்த அரசியல் தலைவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களும் விசாரணையில் வழக்கில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+