"நாளை தர்காவுக்கு முழு பாதுகாப்பு தரணும்!" திருப்பரங்குன்ற விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்ற விவகாரம் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படை கையில் எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தர்காவை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் அறிவுறுத்தியது.

திருப்பரங்குன்ற விவகாரம் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பக்தர்கள் தரப்பு வாதங்கள், தொல்லியல் துறை வாதங்கள், தமிழ்நாடு அரசு மற்றும் ஆட்சியர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறகு இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.

Thiruparankundram Deepam Supreme Court Dargah protection

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நாளைய தினம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், ஒட்டுமொத்த மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படை கையில் எடுக்க ஆணையிட்டது.

மேலும், மலையின் மேலே உள்ள தர்காவை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு முழு சுதந்திரம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்கா அல்லது மசூதிக்கு வரும் பக்தர்கள் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

உச்சி பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படும் தீபத்தில் இருந்து தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+