நடிகர் ரமேஷ் கண்ணா உடல்நிலை இப்போது எப்படி இருக்கு? அவரே கொடுத்த விளக்கம்.. வதந்திகளுக்கு பதில்
சென்னை: நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு என்ன ஆச்சு? என்று கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் பலரும் கவலையுடன் கேள்வி எழுப்பி வந்தனர். அவர் தள்ளாடியபடி இன்னொருவரின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. அந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு காலத்தில் படங்களில் துரு துருவென காமெடி செய்து சிரிக்க வைத்த ரமேஷ் கண்ணாவுக்கு இப்படி ஒரு நிலையா? என்று வருத்தம் தெரிவித்தனர்.

நடிகர் ரமேஷ் கண்ணா விளக்கம்
ரசிகர்கள் மட்டுமில்லாமல், திரை உலகை சேர்ந்தவர்களும் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்து வந்த நிலையில் தற்போது ரமேஷ் கண்ணாவே இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தனக்கு எந்த உடல்நல பிரச்சனையும் இல்லை என்றும் தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த வீடியோவில் தான் மெதுவாக நடந்து சென்றதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார்.
"அந்த பகுதியில் மழை பெய்து சேரும் சகதியமாக இருந்ததுடன் மண்ணும் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் நடக்கும் போது கால் தவறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் கவனமாகவும், மெதுவாகவும் நடந்தேன். இதை வைத்து எனது உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்" என்றும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். உண்மையில் அந்த வீடியோ வெளியானதில் இருந்து பலரும் அவரைப் பற்றி விசாரித்து வந்தார்கள்.
வீடியோவில் இருந்த காட்சி
வீடியோவில் அவர் மற்றொருவரின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்வதை பார்த்ததும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால் அந்த காட்சிக்கு பின்னால் இருந்த காரணம் மழையால் ஏற்பட்ட சேரும் சகதியும் தான் என்று ரமேஷ் கண்ணா விளக்கி இருப்பது ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரமேஷ் கண்ணாவை பொருத்தவரை தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், வசனகர்த்தா என பல வேலைகளையும் பார்த்து இருக்கிறார். கேமராவிற்கு பின்னாடி பார்த்த வேலை பலருக்கும் தெரியாது. ஆனால் பிரண்ட்ஸ், படையப்பா, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், ஆதவன், வீரம் போன்ற படங்களில் எல்லாம் அவருடைய நடிப்பு இப்போது பார்க்கும் போதும் சிரிப்பை வர வைத்து விடும்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
இப்படி பல வருஷங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வரும் ரமேஷ் கண்ணாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கவலைப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் தற்போது அவரே தனது உடல்நிலை குறித்து விளக்கம் கொடுத்திருப்பதால் அந்த கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. நம்மை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்த நடிகர் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.



Click it and Unblock the Notifications
