உச்சநீதிமன்ற உத்தரவை நீர்த்து போக செய்வதை அனுமதிக்க முடியாது! தீபம் விஷயத்தில் கண் சிவந்த நீதிபதி
டெல்லி: திருப்பரங்குன்றம் வழக்கில், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இப்படி இருக்கையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நீர்த்து போக செய்வதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் உறுதியாக தெரிவித்திருக்கின்றனர்.
"உச்சநீதிமன்றத்தின் உத்தரவை யாராக இருந்தாலும் நீர்த்துப்போக செய்ய முடியாது. அரசியலமைப்பு சீர்குலைவை ஏற்படுத்த யாரேனும் முயன்றால்.. நாங்கள் அதை சரி செய்வோம்" என்று நீதிபதி அரவிந்த் குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபம் விஷயத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில்.. தமிழக அரசு மற்றும் காவல்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட விளக்ககங்களை கேட்ட நீதிபதி அரவிந்த் குமார், "இவை உண்மையான கண்ணீரா? அல்லது முதலை கண்ணீரா என்பதை நாங்கள் பார்ப்போம்" என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவில் அறங்காவலர் குழுவுக்கு சலுகை வழங்கப்பட்டதாக அறநிலையத்துறை ஆணையர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டபோது, நீதிபதி குமார் அதைனை திட்டவட்டமாக மறுத்தார். நாங்கள் எந்த சலுகையும் வழங்கவில்லை. தீபம் ஏற்றுவோம் என மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துவிட்டு.. அதை செய்யவில்லை" என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனையடுத்து தற்போது உத்தரவு வாசிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
