திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது எனது வேலை இல்லை! உச்சநீதிமன்றத்தில் ஆட்சியர் வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது எனது வேலை அல்ல, எனது அதிகாரமும் அதற்குள் செல்லாது" என உச்சநீதிமன்றத்தில் நடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தரப்பு தன் வாதத்தில் முன் வைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை பகல் 12 மணிக்கு தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இந்த வாதங்கள் சென்றது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.

thirupparankundram

அப்போது நீதிபதி அரவிந்த் குமார், "தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் தீர்ப்பு. உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி இருந்தால் எதற்கு இந்த அவமதிப்பு வழக்கு வரப்போகிறது? எங்கள் உத்தரவை செயல்படுத்தினீர்களா என ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது மதுரை ஆட்சியர் தரப்பு "ஆம் செயல்படுத்தினோம்" என தெரிவித்தது.

அதற்கு நீதிபதி, "இங்கு தீபம் ஏற்றுவதாக ஒப்புக் கொண்டுவிட்டு பிறகு அந்த வாக்குறுதியை காப்பாற்றாமல் இருந்தால் என்ன அர்த்தம்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆட்சியர் தரப்பு வாதத்தில், "உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றுவேன் என்றுதான் சொன்னேனே தவிர தீபத்தூணில் தீபமேற்றுவேன் என நான் சொல்லவில்லை. தீபத்தூணில் தீபமேற்றுவது என் வேலையும் இல்லை, எனது அதிகாரமும் தீபமேற்றும் விவகாரத்திற்குள் வராது" என வாதிட்டார்.

முன்னதாக மனுதாரர் தரப்பு தன் வாதத்தில் "டிசம்பர் 15ஆம் தேதி வரை கார்த்திகை மாதம் உள்ளது. இந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் விளக்கேற்றலாம். எனவே டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விளக்கேற்ற அனுமதிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் திருப்பரங்குன்றத்தில் அறங்காவலர் குழுவை மாற்றி அமைத்துள்ளனர். அப்படியென்றால் இது போன்ற ஒரு உத்தரவு வரும் என எதிர்பார்த்தது யார், அந்த மாற்றியமைக்கப்பட்ட அறங்காவலர் குழுவில் உள்ள 5 பேரில் இந்து அல்லாத ரெஜினா என்பவரும், தீபத்தூணில் விளக்கேற்றக் கூடாது என்று போராடிய ஒருவரும் இருக்கிறார்கள். ஒரு நாள் தீபம் ஏற்றாமல் விட்டுவிட்டால் தீபத்தை ஏற்றவே முடியாது என நினைத்துக் கொண்டுதான் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டுள்ளது" என மனுதாரர் தரப்பு வாதிட்டது.

அது போல் தொல்லியல் துறை சார்பில் மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தில் "தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்ததை நாங்கள் செயல்படுத்துவதற்கு தயாராக இருந்தோம். இதற்காக தீபத்தூணை ஆய்வு செய்ய அங்கு சென்ற போது காவல் துறை எஸ்பி எங்களை தடுத்து நிறுத்தினார். இதே போல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் நாங்கள் அந்த தூண் அருகே செல்ல அனுமதிக்கவில்லை". இவ்வாறு தொல்லியல் துறை வாதிட்டது.

அப்போது மதுரை ஆட்சியர் தரப்பு வாதத்தில் "எந்த எஸ்பி தொல்லியல் துறையினரை தடுத்தார் என்பதை பெயருடன் சொல்ல வேண்டும். ஏதோ மொட்டை கடுதாசி போல் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது. அவர்கள் தீபத்தூணை பார்வையிட மலை உச்சிக்கு வந்ததற்கான புகைப்படம் உள்ளது" என வாதிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+