உங்க தலைமை செயலாளர் பெயர் என்ன? டிஜிபி யார்? திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தமிழக தலைமை செயலாளர் யார்? டிஜிபி யார் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மேலும், அவர்களின் பெயர்களையும் நீதிபதிகள் தனியாக குறித்து வைத்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆஜரானார்.

Thiruparankundram Deepam Case

வாதம்

முதலில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். பிறகு மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்தார். அதன் பிறகே கலெக்டர் சார்பில் ஆஜரான கோபால் சங்கரநாராயணன் தனது வாதத்தை தொடங்கினார்.

அப்போது ஒரு கட்டத்தில் நீதிபதி அரவிந்த் குமார் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றிவிட்டீர்களா என்று மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி அரவிந்த் குமார் நேரடியாக கேட்டார். தொடர்ந்து, தமிழகத்தின் தலைமை செயலாளர் யார், டிஜிபி மற்றும் ஐஜி யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

பெயர்களை கேட்ட நீதிபதி

இதற்கு பதிலளித்த கோபால் சங்கரநாராயணன், தலைமை செயலாளர் சாய் குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்களை தெரிவித்தார். இந்த பெயர்களை நீதிபதிகள் கேட்டு தனியாக குறித்துக்கொண்டனர். இதற்கிடையே மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருந்ததால், சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்து அறிக்கையை முழுமையாக தயாரித்து வருவதாக கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார்.

தொல்லியல் துறை அதிகாரிகளை தீபத்தூண் அருகே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை என்ற தொல்லியல் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா முன்னதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு திட்டவட்டமாக மறுத்தது. தொல்லியல் துறை அதிகாரிகள் மலை உச்சிக்கு சென்றார்கள் எனவும் அவர்களை யாரும் தடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

தொல்லியல் துறை

தொல்லியல் துறை அதிகாரிகள் அங்கு இருந்ததற்கும் புகைப்பட ஆதாரம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதிகாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என்றார். மேலும், அந்த போட்டோக்களை சமர்ப்பிக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தனர். தமிழகத்தை சேர்ந்த ஒரு எஸ்பி, தொல்லியல் துறை அதிகாரிகளை போலீசார் தடுத்ததாகக் கூறியிருப்பதாகவும், ஆனால் அந்த அதிகாரி யார், எப்போது இந்த சம்பவம் நடந்தது போன்ற எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வாதிட்டது.

யார் தடை விதித்தது?

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாகவும் கோபால் சங்கரநாராயணன் சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்ற வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. பிறகு அதை நிறைவேற்றுவதில் என்ன பிரச்சினை" என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து தொல்லியல் துறையுடன் எப்போது, எங்கே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அது குறித்து விரிவான தகவல்களை தருவதாக ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார். மேலும், தீப்பதன்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பிற்பகல் 1.15 மணிக்கு ஆட்சியர் நேரில் ஆஜரானதாகவும், மாலை 4 மணி முதல் காணொலி வாயிலாக ஆஜரானதாகவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+