அவருடன் காதல், டேட்டிங் என பல விஷயங்கள் பரப்புனாங்க.. ஆனால்! தைரியமாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் என்றாலே அவர்களுடைய படங்களை விட, தனிப்பட்ட வாழ்க்கைகளை பற்றிய பேச்சு தான் சில நேரங்களில் அதிகமாக வைரல் ஆகிறது யாரிடம் பேசுகிறார்கள்? யாருடன் வெளியில் சென்றார்கள்? யாரை காதலிக்கிறார்கள் என ஏதாவது ஒரு தகவல் கிடைத்துவிட்டால் அதை வைத்து பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இது போன்ற வதந்திகளுக்கு இப்போது நடிகை மிருணாள் தாகூர் கொடுத்திருக்கும் பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தன்னை பற்றி தொடர்ந்து வெளியாகும் விமர்சனங்களுக்கும் காதல், வதந்திகள் என எதுவுமே தன்னுடைய வேலையை பாதிக்காது என்பதை அவர் பேசியிருக்கும் விதம் பலருக்கும் பிடித்திருக்கிறது. குறிப்பாக நடிகைகளை விமர்சிப்பதற்காகவே ஒரு கூட்டம் காத்திருப்பதாகவும் அவர்கள் எப்போது தவறு செய்வார்கள் என கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மிருணாள் பேசி இருக்கிறார்.

Mrunal Thakur

மிருணாள் தாகூர் பேட்டி

அதாவது அவர் ஒரு பேட்டியில் பேசும்போது, " பொதுவாக நடிகர்களை விட நடிகைகளையே அதிகமாக விமர்சிக்கிறார்கள். நடிகைகளை துரத்துவதற்கென ஒரு கூட்டமே இருக்கிறது. எப்போது தவறு செய்வார்கள் என கண்கொத்தி பாம்பாக காத்திருக்கிறார்கள். எனக்கு வந்த விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சம் இல்ல. காதல், டேட்டிங் என பலவிதமாக பேசினார்கள்.

நான் நதியைப் போல செல்கிறேன். நீங்கள் கற்களை வீசினாலும், பூக்களை வீசினாலும் நான் என் வேலையை பார்த்துக் கொண்டே இருப்பேன். எல்லாவற்றையும் மறக்கவும் மன்னிக்கவும் எதையும் கண்டுகொள்ளாமல் செல்லவும் சினிமா எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. எனவே எத்தனை விமர்சனங்கள் அம்புகளை போல என்னை நோக்கி பாய்ச்சினாலும் "ஐ டோன்ட் கேர்" என்று தான் சொல்லுவேன் என்று மிருணாள் தெரிவித்துள்ளார்.

காதல் கிசுகிசு

ஏற்கனவே மிருணாள் பெயரை சுற்றி காதல், வதந்திகள் அவ்வப்போது வெளியாகி இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் உடன் அவரை இணைத்து பேசப்பட்ட நிலையில், இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும்தான் என்று மிருணாள் விளக்கம் கொடுத்திருந்தார். அதற்கு பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உடன் இணைத்து கிசுகிசு பரவி வந்தது. அதற்கும் விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ரசிகர்கள் ஆதரவு

அவருடைய காதல் வாழ்க்கை, வதந்திகளாகவே பேசப்பட்ட நிலையில் இப்போது மிருணாள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளியாகும் பேச்சுகளை எப்படி அணுகுகிறார் என்பதை காட்டுவதாகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள். ஒரு நடிகையின் படங்கள், நடிப்பு, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பற்றி பேசுவதை விட அவருடைய காதல் வாழ்க்கையை வைத்து விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கடந்து தன்னுடைய வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற மிருணாளியின் பதில் தற்போது இணையத்தில் பலருடைய ஆதரவை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+