"ஓம்” படத்தை பார்த்து கலங்கிய மலைவாழ் மக்கள்.. எங்க வலியே படமாக இருக்கு என நெகிழ்ச்சி.. தனுஷ் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான "ஓம்" ஆபரேஷன் மோல் படத்திற்கு விமர்சனங்கள் ஒரு பக்கம் கலவையாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த படத்தில் கதையோடு நேரடியாக தொடர்புடைய ஜவ்வாது மலைவாழ மக்களுக்கு படம் திரையிடப்பட்ட போது, அவர்கள் சொன்ன வார்த்தைகள் இப்போது பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. தங்களுக்கு நடந்த கொடுமைகளை திறையில் மீண்டும் பார்த்தது போல, உணர்ந்ததாகவும் தங்களுடைய வலியை படமாக்கியதற்கு நன்றி என்றும் அவர்கள் கண்கலங்கி பேசியிருக்கிறார்கள். இந்த வீடியோவை நடிகர் தனுஷ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

OM Dhanush Sai Pallavi Mammootty Box Office

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள ஓம் - ஆபரேஷன் மோல் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் சட்டவிரோத கடத்தல் பின்னணியில் சிக்கிக் கொள்ளும் மலைவாழ் மக்கள் அவர்களின் வறுமை, காவல்துறை நடவடிக்கை அதிகாரம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற பல விஷயங்களை படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

OM Dhanush Sai Pallavi Mammootty Box Office

உண்மை சம்பவங்கள்

ராஜ்குமார் பெரியசாமி படங்களில் உண்மை செய்தியை தழுவிய பல விஷயங்கள் இடம் பிடித்திருக்கும். கடைசியாக அவர் இயக்கிய அமரன் படத்தில் கூட கதை அப்படித்தான் இருந்தது. அதேபோல இந்த படத்திலும் சில உண்மை காட்சிகளை தழுவி படத்தை எடுத்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஜவ்வாது மலை மக்களின் வாழ்க்கையும் அவர்களுக்கு நேர்ந்த சம்பவங்களையும் மையமாகக் கொண்ட சில பகுதிகள் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. அவர்களுக்காக பட குழு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த படத்தை பார்த்த பிறகு அவர்கள் பேசியதுதான் இப்போது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

OM Dhanush Sai Pallavi Mammootty Box Office

கண்ணீர் வார்த்தை

அதாவது அந்த படத்தை பார்த்த ஜவ்வாது மலைவாழ் மக்கள், இது ஏதோ ஒரு சினிமா கதை என்று மட்டும் பார்க்கவில்லை. தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், தங்களுடைய குடும்பத்தினர் சந்தித்த வலிகள் எல்லாம் மீண்டும் கண் முன்னே வந்தது போல உணர்ந்து இருக்கிறார்கள். சிலர் படத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் நிஜத்தில் நடந்த காவல்துறை மோதல்கள் மற்றும் தங்களுடைய உறவுகளை இழந்த பின்னணியோடு தொடர்புபடுத்தியவை என்பதை நினைவு படுத்தி பேசி இருக்கிறார்கள்.

வலி, வேதனை

ஒரு பக்கம் வசூல் நிலவரம், இன்னொரு பக்கம் விமர்சனம் என இந்த படத்தை பற்றி சுற்றி விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும் போது படத்தை பார்த்த ஜவ்வாது மலை மக்கள் கண்கலங்கி பேசியிருப்பது ரசிகர்களை இன்னொரு விதமாக யோசிக்க வைத்திருக்கிறது. ஒரு திரைப்படம் எல்லோருக்கும் ஒரே மாதிரி பிடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் திரையில் தங்களுடைய வாழ்க்கை, தங்களுடைய இழப்பு பிரதிபலிக்கிறது என்பதை அந்த மக்களே உணர்ந்து பேசும் போது அந்த படத்தின் நோக்கம் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

OM Dhanush Sai Pallavi Mammootty Box Office
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+