டூவீலரில் வந்த தேனி பிரியங்கா.. நள்ளிரவில் கணவன் கேட்ட கேள்வி.. நொடியில் சிதைந்த கூடலூர் குடும்பம்
தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் குடும்ப தகராறு காரணமாக நடந்த ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி சண்டை போட்டு வந்தாராம் கணவர்.. கடைசியில் இப்போது செய்துள்ள காரியம் அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது., போலீசாரும் இதை பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.!!!
தேனி மாவட்டம் கூடலூர் கோட்டை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்கத்துரை (47). லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியங்கா (35). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

டூவீலரில் வந்த தேனி பிரியங்கா
ஆரம்பத்தில் இவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்தது.. ஆனால், சமீப காலமாகவே பிரியங்காவின் நடத்தையில் மாற்றம் தென்பட்டுள்ளது.. இதனால் சிங்கத்துரைக்கு மனைவி பிரியங்கா மீது வலுவான சந்தேகமும் எழுந்துள்ளது.. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ஒருகட்டத்தில் தனித்து வாழ முடிவு செய்தனர்.. அதாவது ஒரே வீட்டில் வசித்தாலும் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். சிங்கத்துரை வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார். கீழ்தளத்தில் பிரியங்கா தனது மகன், மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று பிரியங்கா வெளியே சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு மேல் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் தனது டூவீலரில் வந்திருக்கிறார்., மனைவி லேட்டாக வந்ததை பார்த்த சிங்கத்துரை அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். "ஏன் இவ்வளவு நேரம்? எங்கே சென்றுவிட்டு வருகிறாய்?" என்று கேட்டுள்ளார்.
கதறி அழுத குழந்தைகள்
கணவன் இந்த கேள்வியை கேட்டதுமே பிரியங்காவுக்கு கோபம் கொந்தளித்தது. இதனால் மறுபடியும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிங்கத்துரை, கத்தியை எடுத்து வந்து, பிரியங்காவை குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பிரியங்கா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவியை கொலை செய்துவிட்டு சிங்கத்துரை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அம்மாவை கத்தியால் அப்பா சரமாரியாக குத்தி கொன்றதை பார்த்து, அவர்களது மகனும், மகளும் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினரும் உடனடியாக கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிரியங்காவின் உடலை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனல், சிங்கத்துரை தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலூர் சம்பவம் நினைவிருக்கா
இந்த தேனி சம்பவம் நடந்த அதே தினத்தில் வேலூரிலும் இதேபோன்ற கொடுமை நடந்துள்ளது.. வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த கார் டிரைவர் ஹரிபிரசாத் (35), தனது மனைவி கீர்த்திகாவை (30) சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்...
நண்பருடன் மனைவி நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக போலீசில் சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார் டிரைவர் ஹரிபிரசாத்.. 2018-ல் காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இரு சம்பவங்களும் சொல்லும் சோகம்
தேனி, வேலூர் என ஒரே நாளில் நடந்த 2 கொலைகளால் 2 குடும்பங்கள் சிதைந்துள்ளன. இரண்டு சம்பவங்களிலும் தலா 2 குழந்தைகள் தாயை இழந்து நிற்கின்றனர். கணவன், மனைவி இடையே ஏற்படும் சந்தேகம் எந்த அளவுக்கு விபரீதமாக முடிகிறது என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
சந்தேகம் தலைதூக்கும்போது குடும்ப வன்முறை அதிகரித்து, கடைசியில் கொலையில் முடியும் அவலம் தொடர்கிறது. இதில் எந்தத் தவறும் செய்யாத உலகம் தெரியாத பிஞ்சுக் குழந்தைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
வெடிக்கும் குடும்ப வன்முறை
கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளை பேசி தீர்க்காமல், ஆத்திரத்தில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு செல்வது வேதனையானது.. ஒரு நிமிட கோபமும், சந்தேகமும் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே சிதைத்துவிடுகிறது. தேனி சம்பவத்தில் அம்மா உயிரிழந்துவிட்டார். அப்பாவும் தலைமறைவாக உள்ளார். இதனால் அந்த மகனும், மகளும் இனி யாருடைய பராமரிப்பில் வளரப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெற்றோருக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளுக்கும், வன்முறைக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லாத குழந்தைகள், கடைசியில் இருவரின் அரவணைப்பையும் இழந்து தவிக்கும் நிலைதான் மிகவும் வேதனையானது. குடும்ப வன்முறைக்கு பலியாகும் பெண்களுடன், அவர்களை நம்பி வாழும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுகிறது...!!


Click it and Unblock the Notifications
