ராகு கேது பெயர்ச்சி 2026: மீனம் ராசிக்கு 10 மடங்கு உயர்வு.. பண வரவு இரட்டிப்பாகும்.. கடன் தீரும்

Subscribe to Oneindia Tamil

Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது மீனம் ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மீனம்

மீன ராசியினருக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டம் அற்புதமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் ராகு வந்த அமர்வதால் பண வரவு, முதலீடு உங்களுக்கு வேறு மாதிரி இருக்கும். சங்கம், கிளப், அமைப்புகள், சமூகம், சட்ட மன்றம், நாடாளுமன்றம், நிர்வாகம் போன்றவற்றில் பெரிய பொறுப்பு, பெரிய பணத்தை பார்க்கக்கூடிய சூழல் ஏற்படும். பெரிய தொகையை கையாளக்கூடிய அமைப்பு ஏற்படும்.

rahu-ketu-peyarchi-2026-major-career-growth-and-financial-gains-for-meenam-rasi

10 மடங்கு உயர்வு

சங்க காரியங்கள், சமூக நலனுக்காக நிறைய செலவுகளைச் செய்வீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்காக பெரிய அளவில் செலவை செய்வீர்கள். நீங்கள் நினைப்பதை விடட 10 மடங்கு உயர்வு, வெற்றியைக் கொடுக்கும். தெய்வ காரியங்கள், ஆன்மீகம், சடங்குகள், கோயில் காரியங்களுக்காக தானம் கொடுப்பீர்கள். பேரக் குழந்தைகளுக்கு நல்ல காரியங்கள் நடக்கும்.

மன நிம்மதி

உங்கள் பெண் பிள்ளைகள் வயதுக்கு வருவார்கள். கலைத் துறையில் இருப்பவர்கள், பாகவதம் கற்றுக் கொள்வது போன்ற தெய்வத்துக்கு தொடர்புடைய விஷயத்தில் இறங்குவீர்கள். பெரும் மனம் நிம்மதி கிடைக்கும். தாயாரின் ஜெபம் செய்வீர்கள். இது மிகப்பெரிய மாற்றத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும். பிள்ளை நன்றாக செட்டிலாகக் கூடிய அமைப்பு உள்ளது.

முன்னேற்றம்

மகனைப் பிரிவதற்கான வாய்ப்புள்ளது. செட்டிலாவதற்காக வெளியில் செல்வார்கள். திருமணமாக வெளியில் செல்வது போன்ற அமைப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள மனிதர்கள் நண்பர்களாக கிடைப்பார்கள். பெரிய கடனை அடைத்து முடிப்பீர்கள். ஏராளமான நன்மைகளைப் பெறுவீர்கள்.

ஆரோக்கியம்

மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். ஆண்களுக்கு பின்பக்க வலி, உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் வரும். சத்து மாத்திரை எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். லாபம் அற்புதத்தையும், மகிழ்ச்சியையும் தரும். பொருளாதாரம் இரட்டிப்பாகும். பெரிய முதலீடுகள் கைக்கு வந்து சேரும். கையிருப்பு பணம் அதிகரிக்கும்.

பரிகாரம்

சந்தோஷம் ரீதியாக 85 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 95 சதவீதமும் நன்றாக இருக்கும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் பூ முடி கொடுப்பது, ஆண்கள் மொட்டை அடிப்பது மேன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+