அம்மா, அடுத்தவர் மனைவிதான் வேணும்.. அடம்பிடித்த மகன்.. நள்ளிரவில் சிசிடிவில் உருவம்! அதிர்ந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் 21 வயது இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வெளியே தூங்கியபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். திருமணமான பெண்ணை, திருமணம் செய்ய விரும்பியதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைதான் இந்த மொத்த சம்பவத்துக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அப்படி என்ன நடந்தது?

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஜக்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் புட்டையா (51), சிவம்மா (47). இவர்களுக்கு முத்துராஜ் என்ற மகன் இருந்துள்ளார்.

Tumakuru Karnataka Crime Mother Son Murder

முத்துராஜ் பெங்களூருவிலுள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அடுத்தவர் மனைவி

அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த, பெண்ணை முத்துராஜ் விரும்பியிருக்கிறார். ஆனால், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. அப்படியிருந்தும்கூட அவரையே கல்யாணம் செய்து கொள்ள முத்துராஜ் ஆசைப்பட்டிருக்கிறார்.. மகனின் இந்த முடிவை கேட்டு, சிவம்மா அதிர்ச்சி அடைந்தார்.. இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம் என்றும் மகனை எச்சரித்துள்ளார். ஆனால் முத்துராஜ் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லையாம்.. இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது..

துமகூரு அம்மா - மகன்

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு முத்துராஜ் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே பாய் விரித்துப் படுத்துத் தூங்க, சிவம்மா வீட்டுக்குள்ளே படுத்து தூங்கியிருக்கிறார்.. மறுநாள் காலையில் முத்துராஜ் சடலமாக ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.. காலையில் மகனின் உடலை முதலில் பார்த்தது சிவம்மாதான்.. அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். உடம்பெல்லாம் ரத்த காயங்கள் கிடந்துள்ளன.. மண்டை பிளக்கப்பட்டிருந்தது.. சிவம்மா, மகனின் சடலத்தை கண்டு கதறி அழுததுடன், கொலையாளிகளை திட்டி சாபமிட ஆரம்பித்து விட்டார்..

இதையடுத்து போலீசார் விசாரணையை துவங்கினார்கள்.. மகனுக்கு எதிரிகள் யார் யார் என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமானது.. அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. முத்துராஜின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிந்த பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிசிடிவி பதிவான உருவம்

இதனிடையே, போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போதுதான், நள்ளிரவில் ஒரு பெண் வீட்டிலிருந்து வெளியே வரும் காட்சி பதிவாகியிருந்தது. அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்த முத்துராஜை தாக்கிவிட்டு மறுபடியும் வீட்டுக்குள்ளேயே செல்வதும் அதில் தெரிந்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்த போலீசார் அந்தப் பெண் யார் என்று விசாரித்தனர். அப்போதுதான் அவர் முத்துராஜின் தாய் சிவம்மா என்பது தெரியவந்தது.

பரபர வாக்குமூலம்

இதையடுத்து சிவம்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மகனை தாக்கியது தான்தான் என்று ஒப்புக்கொண்டாராம்.. "மகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தாக்கவில்லை, மகனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றுதான் நினைத்தேன்.. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள பெண் மீது என் மகனுக்கு ஆசை வந்துவிட்டது.. அப்பெண்ணையே திருமணமும் செய்ய துணிந்ததால்தான், இப்படியொரு காரியத்தை செய்தேன்" என்று வாக்குமூலம் தந்துள்ளார்.

மகனுக்கு பாடம் புகட்ட நினைத்த தாயின் செயல், கடைசியில் அவரது உயிரையே பறித்துவிட்டது... அதைவிட முக்கியமாக, மகனை கொன்றுவிட்டு, கொலையாளிகளை தேடுவது போலவும், சாபம் விட்டுக்கொண்டும் அழுத தாயின் செயல், அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+