STAR 3.0 சிக்கல்களுக்கு நடுவே 6 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்.. எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வீடு, மனை, நிலம் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. சில அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில், சென்னை உட்பட 6 இடங்களில் புதிய இணை சார்பதிவாளர் அலுவலகங்களை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் சொத்துப்பதிவு செய்யும் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?

தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் நவம்பர் 26-ம் தேதி அரசாணை எண் 191 வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, கோவை வடக்கு, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய 6 பதிவுத்துறை மாவட்டங்களில் புதிய இணை சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.

STAR 3 0 Registration System New Sub Registrar Offices Tamil Nadu Registration Department STAR 3 0

இணை சார்பதிவாளர் அலுவலகம்

இதில் சென்னை வடக்கில் இணை சார்பதிவாளர் அலுவலகம் எண் 2-ம், மத்திய சென்னை மற்றும் சென்னை தெற்கில் அலுவலகம் எண் 3-ம் அமைக்கப்படுகின்றன. அதேபோல் செங்கல்பட்டு அலுவலகத்தில் எண் 3-ம், கோவை வடக்கு மற்றும் தாம்பரத்தில் எண் 2-ம் புதிதாக அமைக்கப்படுகின்றன.

பத்திரப்பதிவு தொடர்பான பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...அந்தவகையில், புதிய இணை சார்பதிவாளர் அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுடன் இணைக்கப்படும். அதுமட்டுமல்ல, இந்த அலுவலகங்களில் பணியாற்றும் இணை சார்பதிவாளர்களுக்கு பதிவாளர் பணிகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த அலுவலகங்கள் மாதிரி பத்திரப்பதிவு மையங்களாக (Model Registration Hubs) செயல்பட உள்ளன... கடந்த செப்டம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், மாநிலம் முழுவதும் 25 மாதிரி பத்திரப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் முதல் கட்ட நடவடிக்கையாகவே இப்போது 6 இடங்களில் புதிய அலுவலகங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு - STAR 3.0 சிக்கல்

இதனிடையே, பத்திரப்பதிவுக்காக அரசு அறிமுகப்படுத்திய ஸ்டார் 3.0 ஆன்லைன் முறையிலும் சில பிரச்சனைகள் இருப்பதாக மக்கள் புகார் சொல்கிறார்கள்.

ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்வதில் சிக்கல், விண்ணப்பத்தில் தவறு ஏற்பட்டால் அதைச் சரிசெய்வதில் சிரமம் என ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாதவர்கள் பத்திர எழுத்தர்களையோ, கணினி மையங்களையோ நாட வேண்டியிருக்கிறது.

6 இடங்களில் அலுவலகங்கள்

இப்படிப்பட்ட நிலையில், 6 இடங்களில் புதிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் அமைப்பது நல்ல நடவடிக்கைதான். ஆனால் அலுவலகங்களில் கூட்டம் குறைவதுடன், ஸ்டார் 3.0 முறையில் உள்ள பிரச்சனைகளையும் அரசு சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் பத்திரப்பதிவுக்கு வரும் மக்களுக்கு உண்மையான பயன் கிடைக்கும்.

இந்த புதிய அலுவலகங்கள் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? அங்கு என்னென்ன வேலைகளைச் செய்ய முடியும்? என்பது பற்றிய அடுத்தகட்ட அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+