விவசாயம் மொத்தமா காலி! வறட்சியின் பிடியில் டெல்டா! என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் போதிய மழை இல்லாத காரணத்தால், சம்பா-தாளடி பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே குறுவை சாகுபடி பொய்த்துப்போனதால், விவசாயிகளின் நிலை மோசமடைந்திருக்கிறது. இப்போது சம்பா-தாளடி பயிரை காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் திரும்பும் இடமெல்லாம் பச்சை பசேலென்று இருக்கும். ஆனால், பெரும்பாலான நிலங்கள் காய்ந்து காணப்படுகின்றன. காரணம் பருவமழை இல்லாததுதான். வழக்கமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் திறக்கப்பட்டது.

farmers tamil nadu TVK

பொய்த்துப்போன குறுவை சாகுபடி

டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 4.40 லட்சம் முதல் 5.22 லட்சம் ஏக்கர் வரை குறுவை நெல் சாகுபடி நடக்கும். இதில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய கடைமடை மாவட்டங்களில் விவசாயிகள் முழுக்க முழுக்க.. மேட்டூர் அணை நீரை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை 81 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடி சுமார் 1.73 லட்சம் ஏக்கர் குறைந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 96 சதவீதம் சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது.

சம்பா மற்றும் தாளடி நிலைமை என்ன?

சம்பா மற்றும் தாளடி சாகுபடியை பொறுத்தவரை, டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு வெறும் 7 லட்சம் ஏக்கர் அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போதும், அணையில் இருந்து 50 நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் கடைமடை மாவட்டங்களுக்கு சென்று சேருவதில் காலதாமதம் ஏற்பட்டது. சில பகுதிகளில் மேட்டூர் நீர் போய் சேரவே இல்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.

கருகும் பயிர்கள்

போதாத குறைக்கு.. வடக்கு கிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் வரத்தை நின்று விட்டதாலும் நேரடி விதைப்பு செய்யப்பட்ட 40 முதல் 50 நாட்களுக்கான இளம் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரின்றி கருகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் மட்டும் 1,500 ஏக்கர் மற்றும் நாகப்பட்டினம் தலைஞாயிறு பகுதியில் சுமார் 11,424 ஏக்கர் அளவுக்கு பயிர்கள் காய்ந்து வருகின்றன. பல இடங்களில், விவசாயிகள் அருகில் உள்ள குளம், குட்டைகளில் இருந்து பம்புசெட் மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களின் இரண்டு பகுதி

போர்வெல் அமைத்து பயிர்களை காப்பாற்றுவது என்பது டெல்டா மாவட்டம் முழுவதுக்கும் சாத்தியம் இல்லை. காரணம் நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீர் உப்பு தன்மை கொண்டதாக இருக்கிறது. எனவே போர்வெல் அமைத்து இங்கு பாசனம் செய்ய முடியாது. ஆகவேதான் 100% மேட்டூர் அணையிலிருந்து வரும் நீரை மட்டுமே இவர்கள் நம்பி இருக்கிறார்கள். அதே போல திருவாரூர் மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புத்தன்மையுடன் தான் இருக்கிறது. எனவே, இந்த மாவட்ட விவசாயிகளும் அதிக அளவில் மேட்டூர் நீரையே நம்பி இருக்கிறார்கள்.

எனவே இந்த மாவட்டங்களில் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்து.. இதனை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை சமாளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+