உதயநிதி பிறந்தநாள் பேனர் விபத்தில் 2 பேர் பலி.. அமைச்சர் நிர்மல்குமார் இரங்கல்.. திருவள்ளூரில் சோகம்
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது 50 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காக திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி பிறந்தாளுக்காக பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரக் கம்பி உரசியதில் உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக அமைச்சர் நிர்மல்குமார் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை திமுகவினர் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். பேனர் ஒட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

உதயநிதி 50 ஆவது பிறந்தநாள்
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி, முதல்வரும் தந்தையுமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இருவர் பலி, ஒருவர் காயம்
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி பிறந்தாளுக்காக பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரக் கம்பி உரசியதில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தவெக அமைச்சர் நிர்மல்குமார் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இரங்கல் தெரிவித்த நிர்மல்குமார்
இதுகுறித்து சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
