தமிழ்நாடு தொட தயங்கும் விஷயத்தை.. தைரியமாக கையில் எடுத்த அகிலேஷ் யாதவ்! பாஜகவுக்கு பெரிய சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டிருக்கிறார். இந்த வாக்குறுதிகள் பாஜகவுக்கு பெரிய சிக்கலாக மாறியிருக்கின்றன.

2014ம் ஆண்டு வேலையின்மை, போதிய வருமானம் இல்லாதது உள்ளிட்ட பிரச்சனைகளை பேசிதான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக இந்த பிரச்சனை இன்னும் சரியாகாமல் அப்படியேதான் நீடிக்கிறது.

Uttar Pradesh elections Old Pension Scheme Akhilesh Yadav Samajwadi Party

வேலைவாய்ப்பும், ஓய்வூதியமும்

படித்த இளைஞர்களுக்கு, அவர்களின் படிப்புக்கு ஏற்ப வேலை கிடைக்கவில்லை. அப்படியே வேலை கிடைத்தாலும் கூட.. அடிமாட்டு சம்பளம்தான் கிடைக்கிறது. இதனால் மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். சரி தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்குதான் இந்த நிலைமை என்றால்.. அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இதை கொண்டு வந்தது என்னவோ மத்திய அரசுதான். அதன் பின்னர்தான் பல்வேறு மாநில அரசுகள் இந்த திட்டத்தை அமல்படுத்த தொடங்கின.

அகிலேஷின் வாக்குறுதி

இப்படி அமல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து.. தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். எனவே அரசு ஊழியர்களின் ஆதரவு தேவை என்பதற்காக, தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவதாக உறுதி கொடுத்திருந்தது. ஆனால், இன்னும் அமல்படுத்தவில்லை. இப்படி இருக்கையில்தான் தற்போது உத்தரப் பிரதேசத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவோம் என அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் சிக்கல்

வெளியில் இருந்து பார்ப்பதை போல இது ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் எந்த பங்களிப்பையும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், அவர்கள் ஓய்வு பெறும்போது அரசு அவர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்கும். மட்டுமல்லாது.. விலைவாசி உயர்வை சமாளிக்க அவர்களுக்கு அகவிலைப்படியும் வழங்கப்படும். அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் போல பணம் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்.

கடன் வலையில் சிக்கும் உ.பி

அகிலேஷ் யாதவ், நான் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று கூறியிருக்கிறார். அத்தனை பேரும் பழைய ஒய்வூதிய திட்டத்தில் கொண்டுவரப்படுகிறார்கள் எனில்.. நிச்சயமாக நிதி விஷயத்தில் மாநில அரசு பெரிய கடனில் சிக்கும். ஆட்சிக்கு வந்தால்.. சமாஜ்வாதி அரசு இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

கண் முன்னாடியே இருக்கும் உதாரணம்

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு முழு ஆதரவு அளித்த கட்சிகளில் தவெகவும் ஒன்று. அது தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருக்கிறது. 6 மாதங்கள் கடந்த பின்னரும் கூட.. அக்கட்சியால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. அவ்வளவு ஏன்.. இன்னும் இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் கூட தொடங்கவில்லை. காரணம் நிதி நெருக்கடிதான். கேரளாவிலும் இதே நிலைமைதான். பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பக்கம் பக்கமாக பேசிய சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கூட.. ஆட்சியில் இருந்தபோதும், புதியதாக ஆட்சிக்கு வந்த பிறகும் அதை அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாத்துக்கும் காரணம் நிதி ரிஸ்க்.

இப்படி தமிக அரசு தொட பயப்படும் விஷயத்தை, அகிலேஷ் யாதவ் அமல்படுத்துவதாக அறிவித்திருக்கிறார். ஒருவேளை இதை வெற்றிகரமாக அமல்படுத்திவிட்டால்.. பாஜகவுக்கு பெரிய பின்னடைவு ஏற்படும். அத்துடன் உ.பியில் தனது ஆட்சியை பாஜக மறந்துவிட வேண்டியதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+